பாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்
குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனைடு கலந்துள்ளார் ஜோலி
Recommended Video
திருவனந்தபுரம்: என்ன ஒரு குரூரமான மனசு பாருங்க இந்த ஜோலிக்கு.. பச்சைக் குழந்தைக்கு அவள் சாப்பிடும் பிரெட்டில் சயனைடைக் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் இந்தப் பெண்.
ஜோலியின் கிரிமினல் செயல்களைத் தோண்டத் தோண்ட போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து போய் வருகின்றனர். அந்த அளவுக்கு அதிர வைப்பதாக உள்ளது அவரது செயல்பாடுகள்.
விஷத்தைக் கலப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த பொருட்கள்தான் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு நுணுக்கமாக செயல்பட்டுள்ளார் ஜோலி.

பதட்டம்
சோப்பு, மது, கறி மசாலா, பிரெட் , மருந்துகள் என விதம் விதமாக தேர்வு செய்து நிறுத்தி நிதானமாக பிளான் செய்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் கொலை செய்துள்ளார் ஜோலி. எந்த பதட்டமும் இல்லாமல், தவறு வெளியே கொஞ்சம் கூட தெரியாத வகையில் அவர் செயல்பட்டுள்ளார்.

சர்ச்
ஜோலி கொலை செய்த 6 பேரில் 2 வது குழந்தை ஆல்பினும் ஒன்று. இந்தக் குழந்தையை மிகக் குரூரமாக கொலை செய்துள்ளார் ஜோலி. கோடன்சேரியில் உள்ள சர்ச் ஒன்றில் சம்பவ தினத்தன்று ஷாஜுவின் மகன் ஆல்பினுக்கு ஞானஸ்தானம் செய்தனர். அப்போது தனது கையால் குழந்தைக்கு பிரெட் ஊட்டி விட்டுள்ளார் ஜோலி.

விஷம்
அந்த பிரெட் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் குழந்தை இறந்து விட்டது. இந்த சம்பவத்தை அப்போது நேரில் பார்த்த ஒருவர், தற்போது போலீஸாரிடம் கூறியுள்ளார். போலீஸார் இதுகுறித்து ஜோலியிடம் கேட்டபோது பிரெட்டில் விஷம் கலந்திருந்ததாக ஒப்புக் கொண்டாராம். சாப்பிடக் கொடுத்த பிரெட்டில் யாருக்குமே சந்தேகம் வராத வகையில் சயனடை கலந்துள்ளார் ஜோலி.

சிக்கல்?
சம்பவத்தன்று ஆல்பின் சாப்பிட்ட பிரெட்டில் கொஞ்சம் மீந்துள்ளது. அதை பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டாராம் ஜோலி. நாய் ஏதாவது சாப்பிட்டால் சிக்கலாகி விடும் என்பதால் கீழே கூட போடாமல் எங்கோ கொண்டு போய் போட்டுள்ளார். அனேகமாக அதை அவர் புதைத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications