கேரளாவில் நண்பனை கொன்ற எஸ்ஐ.. வேலை பார்த்த ஸ்டேசனுக்கு பறந்த போன்.. படுபயங்கர வேலை
திருவனந்தபுரம் : கேரளாவில் மது போதையில் நண்பரை கொன்றுவிட்டு தன்னுடைய போலீஸ் ஸ்டேஷனுக்கே தகவலும் கொடுத்திருக்கிறார் எஸ்ஐ ஒருவர்.. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பதை பார்ப்போம்.
கேரளாவின் கண்ணூரில் குடிபோதையில் நண்பனை அடித்துக் கொன்றுள்ளார் எஸ்ஐ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வெளியிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் மயிலில் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த 42 வயதாகும் தினேசன் என்பவரும் சகஜீவன் (39) என்பவரும் நண்பர்கள் ஆவார்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை இவர்கள் 2 பேரும் குளச்சேரி என்ற பகுதியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் தினேசனின் வீட்டிலேயே கள் குடித்திருக்கிறார்கள் . அப்போது 2 பேரும் அளவுக்கு அதிகமாக கள் குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி இருந்துள்ளனர்.
அப்போது ஏதோ ஒரு விஷயத்திற்காக 2 இளைஞர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் தினேசன் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து நண்பன் என்றும் பாராமல் சஜீவனின் தலையில் பலமுறை ஓங்கி அடித்திக்கிறார்.
இதனால் அங்கேயே நிலைகுலைந்து சஜீவன் விழுந்து உயிருக்கு போராடியிருக்கிறார் இதுபற்றி உடனே தான் பணியாற்றும் காவல் நிலையத்திற்கே எஸ்ஐ தினேசன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தினேசன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய சஜீவனை மீட்டு சிகிச்சைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சஜீவன் உயிரிழந்தார்.
கண்ணூர் மாவட்ட போலீசாரின் விசாரணையில் குடிபோதை தகராறில் சஜீவனை, அவரது நண்பரான மயிலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேசன் கட்டையால் அடித்து கொன்றது உறுதியானது இதையடுத்து போலீசார், தினேசனை தேடி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications