Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவில் திருவிழாவில் பலூன் விற்ற பொண்ணா இது..? ஒரே போட்டோ.. ஃபேமஸ் மாடலாக மாறிய கிஸ்பு.. வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் புகைப்படக் கலைஞரின் முயற்சியால் சாலையோரம் பலூன் விற்பனை செய்து வந்த இளம் பெண் ஒரேநாளில் பிரபலம் அடைந்துள்ளார்.

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சாமானியர்கள் கூட ஒரே நாளில் செலிப்ரட்டி ஆகி விடுகின்றனர். அந்த வகையில் தற்போது டிரெண்டாகி இருப்பவர்தான் கிஸ்பு என்ற இளம்பெண்.

கன்னூர் மாவட்டம் அண்டலூரில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவில் பலூன் விற்பனை செய்து வந்துள்ளார் கிஸ்பு. அப்போது திருவிழாவை படம்பிடிக்க சென்ற அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர் கிஸ்பு பலூன் விற்பதையும் படம் பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் புகழ்

இன்ஸ்டாகிராம் புகழ்

அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜுன் கிருஷ்ணன் வெளியிட அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கத்துக்கு மாறாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லைக்குகளை கிஸ்புவின் படம் வாரிக்குவித்ததை அடுத்து கிஸ்புவின் பெற்றோரை அணுகியுள்ளார் அர்ஜுன். அவர்கள் தனது மகளின் படத்தை பார்த்தவுடன் பூரித்துப்போயுள்ளனர். இதையடுத்து கிஸ்புவை வைத்து போட்டோஷூட் நடத்த அனுமதிகோரியுள்ளார் அர்ஜுன். தொடக்கத்தில் தயங்கிய கிஸ்புவின் பெற்றோர் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பலூன் TO பியூட்டி செலப்ரட்டி

பலூன் TO பியூட்டி செலப்ரட்டி

பின்னர் தனது ஆஸ்தான மேக்கப் கலைஞர் ரெம்யா பிரஜுலிடம் கிஸ்புவை அழைத்துச் சென்றுள்ளார் அர்ஜுன். அவரோ கிஸ்புவை அடையாளம் தெரியாத அளவுக்கு அழகாக மாற்றியுள்ளார். இதன் பின்னர் கேரள பாரம்பரிய வெள்ளை நிற கசாவு சேலையுடன் தங்க நகைகள் அணிவித்து கிஸ்புவை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துள்ளார் அர்ஜுன் கிருஷ்ணன்.

என்ன அழகு

என்ன அழகு

கோயில் வாசலில் பலூன் விற்ற பெண்ணா இது என்ற பார்ப்பவர்கள் வாய்பிளக்கும் அளவுக்கு சினிமா நடிகை போல் அழகாக உருமாறிய கிஸ்புவின் படத்தை இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கிருஷ்ணன் வெளியிட, தற்போது சமூக வலைதளங்களின் டிரெண்டிங் முகமாக உருமாறியுள்ளார் கிஸ்பு.

 மாடலாகிவிட்டார் கிஸ்பு

மாடலாகிவிட்டார் கிஸ்பு

இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கிருஷ்ணன் வெளியிட்ட கிஸ்புவின் படங்கள் பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும், கமெண்டுகளையும், பகிர்வுகளையும் பெற்று வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் அர்ஜுன் கிருஷ்ணன் பிரபலமான புகைப்படக் கலைஞராகவும், கிஸ்பு பிரபல மாடலாகவும் உருவெடுத்துள்ளனர்.

கூலித் தொழிலாளி தொழிலதிபரானார்

கூலித் தொழிலாளி தொழிலதிபரானார்

இதேபோல் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வயதான கூலித் தொழிலாளிக்கு பிரபல தொழிலதிபரை போல் மேக்கப் செய்து புகைப்படக் கலைஞர் எடுத்த படம் அவரை ஓவர் நைட்டில் இணைய உலக பிரபலமாக உருமாற்றியது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+