"மிஷன் கேரளா.." கன்னியாஸ்திரிகள் கைதால் நிலைமை மோசம்.. பிளான் Bஐ கையில் எடுத்த பாஜக! என்ன நடக்கிறது
திருவனந்தபுரம்: கேரளா பாஜக கிறிஸ்துவர்கள் மத்தியில் மெல்லத் தங்கள் ஆதரவை வளர்த்து வந்தது. பல ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இப்போது தான் கேரளக் கிறிஸ்துவர்கள் பாஜக பக்கம் மெல்லத் திரும்பினர். இந்தச் சூழலில் பாஜக ஆளும் சத்தீஸ்கரில் திடீரெனக் கேரளக் கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்டது சர்ச்சையானது.. இது கேரள பாஜகவின் ஒட்டுமொத்த முயற்சிகளையும் காலி செய்துவிட்டது என்பதே உண்மை.
கடந்த மாதம் சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம், பாஜகவுக்கும் கிறிஸ்தவச் சமூகத்துக்கும் இடையிலான உறவில் விரிசலை அதிகப்படுத்தியது.. குறிப்பாகக் கேரள பாஜகவுக்கு இது பின்னடைவை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேரள பாஜக நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தன.

பாஜக
இந்த விவகாரம் பாஜகவுக்கும் கிறிஸ்துவத் திருச்சபை தலைமைக்கும் இடையிலான தொடர்பைக் குறைத்துவிட்டது என்பதை ஒப்புக்கொண்ட ஒரு பாஜக தலைவர், அதேநேரம் இது தற்காலிகமானது தான் என்றும் நிலைமை சீராகும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் பெற பாஜக மட்டுமே முயன்றது என்பதைத் தேவாலயங்களுக்கு எடுத்துரைக்கிறோம். கேரளாவில் உள்ள பல பிஷப்கள் இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டனர்" என்றார்.
கட்டாய மதமாற்றம் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. நிலைமையை ஓரளவுக்குச் சமாளிக்க மாநில பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ மதத் தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீடுகளால்தான் கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் கிடைத்தது என்பதையும் விளக்கி வருகிறார்கள். ஜூலை 25ம் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் 9 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள பிஷப்கள்
அதேநேரம் எல்லாத் தேவாலயங்களும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக இல்லை என்பது அக்கட்சிக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அங்குள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய குரலாகக் கருதப்படும் பேராயர் ஜோசப் பம்ப்ளானி, கன்னியாஸ்திரிகளை விடுவிப்பதில் பாஜகவின் தேசியத் தலைமையின் பங்கு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.. இது சக பிஷப் பாலி கண்ணுக்கடான் எடுத்த நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது. மத்திய அரசும் மற்றும் சத்தீஸ்கர் பாஜக அரசும் கன்னியாஸ்திரிகளை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கன்னூக்கடான் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் பல பிஷப்கள் பாஜக எடுத்த முயற்சியை ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாகவே கன்னியாஸ்திரிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, பல பிஷப்கள் மற்றும் பாஸ்டர்கள் பாஜக தலைமையகத்திற்கு வந்து நன்றியைத் தெரிவித்தனர். கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஒட்டுமொத்தக் கிறிஸ்தவத் தலைமையையும் பாஜகவை எதிர்க்காதது நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்
மேலும், இந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கும் நிலையில், அங்குள்ள பாஜக இளைஞர்களைக் கவர "விக்சித் கேரளம்" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் கூறுகையில், "கேரளாவில் வாழ்வாதாரம் சிறப்பாக இல்லை என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். வேலையின்மை அதிகமாக இருப்பதால், வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள கிறிஸ்தவ இளைஞர்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்கிறோம். அவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம்" என்றார்
மிஷன் கேரளா
தென்னிந்தியாவில் பாஜக தனது கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், அதில் முக்கிய மாநிலமாகக் கேரளா இருக்கிறது. பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கேரளாவுக்குக் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி கிறிஸ்தவ பிஷப்களை சந்தித்துப் பேசிய நிலையில், அதுவே மாற்றத்திற்கு விதையைப் போட்டது. அதே ஆண்டு டிசம்பரில் நடந்த "ஸ்னே யாத்ரா" என்ற கேரளக் கிறிஸ்தவ மக்களுடன் பாஜகவுக்கான தொடர்பை ஏற்படுத்தியது.
இது தேர்தல்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. கேரளாவில் கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 3%க்கு மேல் அதிகரித்து, 16.68% ஆக அதிகரித்தது. மேலும், கேரளாவில் (திருச்சூர்) தனது முதல் மக்களவைத் தொகுதியையும் பாஜக வென்றது. இப்படிக் கேரள பாஜகவுக்கு மெல்லக் கிறிஸ்துவ மக்களின் ஆதரவு அதிகரித்து வந்த நிலையில் தான் சத்தீஸ்கர் சம்பவம் நடந்தது. இது கேரள பாஜக இத்தனை காலம் செய்த வேலையைச் சீர்குலைப்பதாக இருந்தது.
பாஜக கலக்கம்
கன்னியாஸ்திரிகள் கைதுக்கு எதிராக அங்குள்ள இஸ்லாமியர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் எங்குக் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எதிராக இணைவார்களோ என்று பாஜக கவலை கொண்டது. இது குறித்து மாநில பாஜக துணைத் தலைவர் ஷோன் ஜார்ஜ் கூறுகையில், "SDPI மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவை கிறிஸ்தவர்களின் போராட்டத்தில் நுழைந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவத் தேவாலயங்கள் இஸ்லாத்தால் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. எனவே கிறிஸ்தவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" கூறியிருந்தார்.
பிளான் பி
மேலும், கேரள பாஜக நிலைமை சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன. கேரள பாஜகவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், தேசியச் செயலாளர் அனில் கே ஆண்டனி, மாநில பொதுச் செயலாளர் அனூப் ஆண்டனி ஜோசப் மற்றும் ஷோன் ஜார்ஜ் என 4 பேருக்கு முக்கிய பதவி அளிக்கப்பட்டது. வழக்கமாகக் கிறிஸ்துவச் சமூகத்தில் இருந்து இருவருக்கு மட்டுமே பதவி தரப்படும் நிலையில், இந்த முறை 4 பேருக்கு முக்கிய பதவி தரப்பட்டது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications