அந்த "புள்ளி" யார்? ஆடி காரில் அழகிகளை விரட்டி வந்து.. கேரள மரணத்தில் திடீர் திருப்பம்

கேரள முன்னாள் அழகியின் விபத்து தொடர்பாக திருப்பம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாடல்கள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்கு சூடுபிடித்து வருகிறது.. பல்வேறு தகவல்களும் வெடித்து வருகின்றன.

2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.. இருவரும் நெருங்கிய தோழிகள்.

கடந்த நவம்பர் மாதம் 1ம்தேதி, நள்ளிரவு ஒரு மணிக்கு, அன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக் ஆகியோர் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில், இவர்களது கார் அப்பளம் போல் நொறுங்கியது.. இதில் தோழிகள் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.. டிரைவர் அப்துல்ரஹ்மான் உட்பட 2 பேர் பலத்த காயங்களுடன் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர்... தீவிர சிகிச்சையில் இருந்த முஹம்மது ஆஷிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். டிரைவர் அப்துல் ரஹ்மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் ஓரளவு உடல்நலம் தேறினார்..

விசாரணை

விசாரணை

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 31-ம் தேதி இரவு பார்ட்டியில் இவர்கள் கலந்து கொண்டுவிட்டு திரும்பியது தெரியவந்தது.. அதனால், சம்பந்தப்பட்ட ஓட்டலில் விசாரணை நடத்தினர்.. அப்போது அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளில், பார்ட்டி நடந்த காட்சிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தது.. அதனால், ஓட்டல் ஓனர் ராய் ஜோசப்பிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அப்போதுதான், அழகிகளை யாரோ ஒருவர் ஆடி காரில் பின்னாடியே துரத்தி சென்றதாகவும், விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கியதுமே, அந்த ஆடி காரில் இருந்து, ஷைஜூ என்பவர் இறங்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதே காரில் ஏறி சென்றுவிட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறினார். ஆனால் அதற்குள் தான் கைது செய்யப்படலாம் என்பதை நினைத்து, சம்பந்தப்பட்ட ஷைஜு என்பவர் முன்ஜாமீன் கோரினார்..

கூல்டிரிங்ஸ்

கூல்டிரிங்ஸ்

இந்த ஷைஜூ யார் என்ற அடுத்தக்கட்ட விசாரணையில் போலீசார் இறங்கினர்.. அதுமட்டுமல்ல, 2 பேரும் ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் கூல்டிரிங்ஸ் குடித்துள்ளனர்.. அந்த கூல்டிரிங்ஸில் அவர்களுக்கே தெரியாமல் அதிகம் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அது தெரியாமல் கார் ஓட்டிச் சென்றதால்தான் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள போலீசுக்கு எஸ்எம்எஸ் ஒன்று வந்தது.
அந்த எஸ்எம்எஸ் அனுப்பியது யார் என்ற மற்றொரு விசாரணையிலும் கேரள போலீசார் குதித்துள்ளனர்.

கார் விபத்து

கார் விபத்து

அதேபோல, ஹோட்டலில் பார்ட்டி நடந்தபோது, அழகிகளுக்கும், ஹோட்டல் ஓனருக்கும் வாக்குவாதம் ஏதோ ஏற்பட்டதாகவும், அதனால்தான் அழகிகளின் காரை அவர் ஃபாலோ செய்துள்ளார் என்றும், காரை விபத்துக்குள் சிக்க வைத்துள்ளதாகவும், மலையாள சேனல் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஆடி கார் பற்றி விசாரித்தபோது, அது ஷைஜூ தங்கச்சன் என்பருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது..

வாக்குமூலம்

வாக்குமூலம்

மாடல்களின் காரை பின் தொடர்ந்ததுடன் விபத்து நடந்த பிறகு, ஓட்டல் ஓனர் ராய் ஜோசப்புக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகுதான், ஓட்டலில் பார்ட்டி நடந்த ஹாலில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவான டிவிஆர்-ஐ ராய் ஜோசப் அழித்துள்ளார். ஆனால், இந்த விஷயத்தை அவர் போலீஸ் வாக்குமூலத்தில் மறைத்துவிட்டார். போதையில் கார் ஓட்ட வேண்டாம் என எச்சரிப்பதற்காக பின் தொடர்ந்ததாக கூறியிருக்கிறார்.

விபத்து

விபத்து

எனவே, ஷைஜூ ஆடி காரில் துரத்தி சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் போதைப்பொருள் விநியோகம் போன்ற செயல்களிலும் ஈடுபடிருப்பதாக தெரியவந்ததால் மேலும் மூன்று நாட்கள் கஸ்டடி கேட்டுள்ளது கேரள போலீஸ். ஏற்கனவே மூன்றுநாட்கள் கஸ்டடி நேற்று முடிந்த நிலையில், இன்று முதல் மேலும் மூன்று நாட்களுக்கு போலீஸ் கஸ்டடி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+