கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வைரல் வீடியோ

    திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் கையைபிடித்து திருகி ஒரு மூதாட்டி திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கேரளாவில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Kerala Chief Minister Pinarayi Vijayan shouts at woman during flood relief event in kannur

    அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சாலைகள் சீரமைப்பு, மின்மாற்றிகள் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கண்ணூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா கடந்த சனிக்கிழமை நடந்தது.

    இந்த விழாவில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதுடன் நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது திடீரென மேடைக்கு வந்த சுமார் 60 வயது தாண்டிய மூதாட்டி, அமைச்சர்களுடன் கை குலுக்கினார். அப்படியே முதல்வர் பினராயி விஜயனுடன் கைகுலுக்கினார். பின்னர் திடீரென முதல்வரின் கையை விடாமல் திருகி மூதாட்டி, "உங்களை போன்ற ஆட்களை விட மாட்டேன், ஒருவரையும் விட மாட்டேன்" என கூறி கையை திருகினார். இதனால் கோபம் அடைந்த பினராயி விஜயன் கையை உதறிவிட்டு கீழே போய் உட்காருங்க என கோபமாக கூறினார்.

    இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் மூதாட்டியை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டி கண்ணூர் அருகே தளிப்பறம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. முதல்வர் மூதாட்டி கையை பிடித்து திருகும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+