திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க பருப்பு எங்ககிட்ட வேகாது; நாங்க வேற மாதிரி... பிரதமர் மோடிக்கு, பினராயி விஜயன் வார்னிங்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நாங்கள், நீங்கள்(மத்திய அரசு) இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை அவதூறாக பேசியுள்ளார்.
ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் பினராயி விஜயன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணன் 12-ம் தேதி கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Kerala Chief Minister pinarayi Vijayan warns Prime Minister Modi

இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தங்கள் ஆதாயத்துக்கு பயன்பபடுத்தி வருவதாக பினராயி விஜயன் சராமரியாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

''பாஜகவுக்கும், அவர்களின் இசைக்கு ஏற்ப நடனமாடும் ஏஜென்சிகளுக்கும்(விசாரணை அமைப்புகள்) நான் சொல்ல வேண்டியது இதுதான். நாங்கள், நீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல. எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது. ஏனெனில் இங்கு எங்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது. இதை கூடிய விரைவில் உணருவீர்கள்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

English summary
We, you are not like those who have dealt with so far. Our trend is different. Kerala Chief Minister Binarayi Vijayan has slandered Prime Minister Modi that this soil will not slander us no matter what you do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X