கேரள லாட்டரியில் ரூ.20 கோடி! அடித்து தூக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்? அனல் பறக்க நடக்கும் சேல்ஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட இந்த லாட்டரி சீட்டின் குலுக்கல் விரைவில் நடைபெற உள்ளதால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
வழக்கம் போல இந்த முறையும் பாலக்காடு தான் டிக்கெட் விற்பனையில் முதல் இடம் பிடிக்கும் என தெரிகிறது.
கேரளாவில் சீசனுக்கு ஏற்றபடி பம்பர் லாட்டரிகள் விற்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக 20 பேருக்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது.

குலுக்கல் எப்போது?
ஓணம் பம்பருக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் தொகையாக இந்த டிக்கெட்டிற்கு பரிசு அளிக்கப்படுகிறது என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 90 லட்சம் டிக்கெட்டுகளை கேரள லாட்டரி துறை அச்சிட திட்டமிட்டுள்ளது.
இந்த டிக்கெட்டின் குலுக்கல் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. குலுக்கலுக்கு இன்னும் இருவாரமே எஞ்சியிருப்பதால் டிக்கெட் விற்பனை அனல் பறப்பதாக கேரள லாட்டரி விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால், ஐயப்பன் கோயிலுக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் சிலரும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்குவதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
விற்பனையில் டாப் இடம்
வழக்கம் போல இந்த முறையும் பாலக்காடு தான் டிக்கெட் விற்பனையில் முதல் இடம் பிடிக்கும் என தெரிகிறது. தலைநகர் திருவனந்தபுரம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை வழக்கம் போல விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த முறை கிறிஸ்துமஸ் பம்பர் நியூ இயர் லாட்டரி கண்ணூரில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்தது. XD387132 என்ற எண்ணிற்கு கடந்த நியூ இயர் பம்பர் லாட்டரி அடித்தது. முதல் பரிசு அடித்தால் வரிப்பிடித்தம் போக 10 கோடிக்கும் மேல் கிடைக்கும் என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
20 பேருக்கு ரூ.1 கோடி
அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீசி, வாழ்க்கையே தலைகீழாக புரட்டி போட்டு விடாதா? என்ற எதிர்பார்ப்பில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.20 கோடி தவிர, இரண்டாவது பரிசு 20 பேருக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் விற்பது சட்டவிரோதம் ஆகும்
லாட்டரிகள் குடும்பத்தில் நிதி சிக்கலை ஏற்படுத்தும். எனவே தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட ஒன்றாகும். கேரள லாட்டரிகளை தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்தால் போலீசார் கைது செய்வார்கள். இப்படி கள்ளச்சந்தையில் விற்று பரிசு அடித்தாலும் கேரளா அரசு, பரிசுத் தொகையை வழங்க மறுக்கும். ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப்களில் வாங்கும் லாட்டரிகளுக்கும் பரிசுத்தொகை மறுக்க வாய்ப்புள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications