Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓணம் லாட்டரி: 25 கோடி வென்ற தமிழர்களுக்கு புதிய சிக்கல்? விசாரணை நடத்தும் கேரளா.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூபாய் 25 கோடி பரிசுத்தொகை வென்ற தமிழர்கள் 4 பேருக்கும் பரிசுத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கேரள அரசு லாட்டரி இயக்குனர் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோக கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விஷு, ஓணம், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது.

Kerala conducting investigation complaint Onam Bumper Lottery sold black market in Tamilnadu

இதில் ஓணம் பம்பர் லாட்டரிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை என்பதால் இந்த லாட்டரி சீட்டை வாங்க கேரள மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலத்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். கேரளாவில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பலருக்கும் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு விஷூ பம்பர் லாட்டரி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கிடைத்தது.

வெளி மாநிலத்தவர்களுக்கும் லாட்டரியில் கணிசமாக லாட்டரியில் பரிசுத்தொகை கிடைப்பதால் டிக்கெட் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும், கேரள அரசின் லாட்டரி விதியின் படி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் லாட்டரியை வாங்கலாம். ஆனால், கேரளாவுக்கு வந்து வாங்கியதை பரிசுத்தொகை விழும் போது ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இதானால், கொரியர் மூலமாகவோ வேறு யாரிடமாவது கொடுத்து லாட்டரியை வாங்கினால் பரிசுத்தொகை கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசுத்தொகை அடித்த T230662 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த 4 பேர் வாங்கியது தெரியவந்தது. பாலக்காட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த உறவினரை பார்க்க சென்றுவிட்டு திரும்பும் வழியில் வாளையாறில் டிக்கெட் வாங்கியதாக பாண்டியராஜன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அப்படி வந்து சென்றது மற்றும் லாட்டரி வாங்கியதற்கான அத்தாட்சி எதுவும் அவர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுதான் தற்போது அவர்களுக்கு சிக்கலாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அன்புரோஸ் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கேரள லாட்டரி ஏஜென்சியால் கமிஷன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாகவும் இதனால் அவர்களுக்கு பரிசுத்தொகையை கொடுக்கக் கூடாது. லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை நற்காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரள அரசு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. லாட்டரி துறையின் இயக்குனர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு பரிசுத்தொகை அடித்தவர்கள் கேரளாவிற்கு வந்த போதுதான் லாட்டரியை வாங்கினீர்களா? என்பதை உறுதி செய்த பிறகே பரிசுத்தொகையை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.

கேரள அரசு விதிகளின் படி, கேரள மாநில லாட்டரியை வெளி மாநிலங்களில் விற்பனை செய்ய முடியாது. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால் அவர்கள் கேரளாவிற்கு வந்ததற்கான காரணம் மற்றும் வந்ததற்கான சான்று ஆகியவை பரிசோதிக்கப்படும். புகார் எதுவும் அளிக்கப்படாவிட்டாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழுந்தால் மேற்கூறியவற்றை சரிபார்த்த பிறகே பரிசுத்தொகை உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த முறை புகாரும் சென்று இருப்பதால் குழுவின் விசாரணை மேலும் தீவிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கேரள லாட்டரித்துறை உடனடியாக வருமான வரித்துறைக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படாது என்ற தகவலை தெரிவிக்கும். எனவே, இந்த முறை பம்பர் பரிசுத்தொகை லாட்டரியில் பரிசுத்தொகை அடித்தவர்க்ளுக்கே கிடைக்குமா அல்லது அரசுக்கே கிடைக்குமா என்று கேரளாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பரிசுத்தொகை அடித்தவர்களில் ஒருவரான பாண்டியராஜ் ஏசியா நெட் சேனலுக்கு அளித்த பேட்டியில், கள்ளச்சந்தையில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும் நான்கு பேரும் சேர்ந்துதான் வாளையாரில் டிக்கெட் வாங்கியதாகவும் தேவைப்பட்டால் அங்குள்ள கடைகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+