Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாட்ஜில் வைத்து.. மேக்கப் அழகி கொலை.. ரீல்ஸை திறந்து பார்த்தால்.. தேவிகாவா? மாட்டிய "கள்ளக்காதலன்"

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த பெண் ஒருவரின் கொலை அந்த மாநிலத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் முக்குநோத் பகுதியை சேர்ந்தவர் தேவிகா பிபி. இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார்.

Kerala Crime News: A man kills makeup artist in a lodge over extra marrital affairs and surrenders in Kasarkod

34 வயதாகும் தேவிகாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் திருமண வாழ்க்கையில் சந்தோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சில வருடங்களுக்கு முன் சதீஷ் என்ற இன்னொரு இளைஞரை இவர் காதலிக்க தொடங்கி உள்ளார். தனது பியூட்டி பார்லர் வெளியே அடிக்கடி நிற்கும் சதீஷ் உடன் தேவிகாவிற்கு தீவிர காதல் ஏற்பட்டு உள்ளது. தேவிகா அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.

இவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை திறந்து பார்த்தாலே அதில் பல வீடியோக்கள் மேக் அப் தொடர்பாக இருக்கும்.

சதீஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தேவிகா அழகில் மயங்கி சதீஷ் அவரை அடிக்கடி நோட்டமிட்டுள்ளார். கணவனுடன் சந்தோசமாக இல்லாமல், கஷ்டத்தில் இருந்த தேவிகாவும் ஒரு கட்டத்திற்கு மேல் சதீஷை திரும்பி பார்க்க தொடங்கி உள்ளார்.

சதீஷ் ஏற்கனவே தேவிகாவிடம் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறி உள்ளார். ஆனாலும் திருமணத்தை கடந்து இவர்கள் உறவு நீண்டு இருக்கிறது. தேவிகா சதீஷை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து கேட்டு உள்ளார்.

Kerala Crime News: A man kills makeup artist in a lodge over extra marrital affairs and surrenders in Kasarkod

ஆனால் சதீஷ் கேட்காமல் இப்படியே தொடரலாம் என்று கூறி உள்ளார். நீ உன் மனைவியை விவாகரத்து செய்துவிடு.. நான் என் கணவனை விவாகரத்து செய்துவிடுகிறேன்.. அதோடு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

ஆனால் சதீஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பவில்லை. இப்படியே தேவிகாவை கள்ளகாதலியாக வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதெல்லாம் போக தேவிகா கடந்த சில மாதங்களாக குழந்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். சதீஷ் நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதன்பின் திருமணம் செய்து கொள்ளலாம். எனக்கு இப்போது குழந்தைதான் முக்கியம், என்று கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு சதீஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் சண்டை வந்து சதீஷ் தேவிகாவை கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீஸ் வெளியிட்ட அறிவிப்பில்,

காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் முக்குநோத் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் சதீஷ் தங்கி வந்துள்ளார். அங்குதான் அவர் 1 மாதமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த லாட்ஜுக்கு தேவிகாவும் வந்துள்ளார். இவர்கள் ஒன்றாக நேற்று முதல்நாளில் இருந்து நேற்று மதியம் வரை தங்கி உள்ளனர்.

இதையடுத்து நேற்று மதியம் 1.30 மணியளவில் லாட்ஜில் சதீஷ் தேவிகாவை கொலை செய்துவிட்டு அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு சென்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். பின்னர் சதீஷ் லாட்ஜில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்து சென்று போலீசில் சரணடைந்தார்.

தேவிகா கழுத்தை அறுத்து சதீஷ் கொலை செய்துள்ளார். சதீஷ் வாக்குமூலத்தை தொடர்ந்து தேவிகா உடலை போலீசார் கைப்பற்றினர். குழந்தை கேட்டு நச்சரித்தது மற்றும் திருமணம் செய்ய சொன்னது போன்ற காரணத்தாலேயே தேவிகாவை கொலை செய்ததாக கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+