சிறுமியை பலாத்காரம் செய்ததும் இல்லாமல்.. "இதுவேறயா?".. பெயிலில் வந்த குற்றவாளி செய்த காரியம்.. ஷாக்!
திருவனந்தபுரம்: கேரளாவில் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த இளைஞர் பெயிலில் வந்து அதே சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் பணவூரை சேர்ந்தவர் அல் அமீர். 23 வயதாகும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
சில திருட்டு வழக்குகள், பொது இடத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது போன்ற பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன. இந்த நிலையில்தான் சமீபத்தில் அவருக்கு எதிராக பலாத்கார வழக்கும் பதியப்பட்டது.

பலாத்காரம்
அல் அமீர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி இவரின் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அந்த மாணவி பள்ளியில் படிக்கும் போது தினமும் அவரை சென்று பார்த்து உள்ளார். சில சமயம் அவரை பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்துள்ளார். இந்த பிரச்சனை அடிக்கடி நடந்து உள்ளது. கடந்த வருடம் 12ம் வகுப்பு முடித்த நிலையில் அந்த மாணவி கல்லூரியில் சேர்வது தொடர்பான திட்டத்தில் இருந்துள்ளார்.

தோழி
இதற்காக தனது தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கே ஆலோசனை செய்துள்ளார். எந்த கல்லூரியில் சேரலாம், எந்த கோர்ஸ் சேரலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார். இரவில் தனியாக அந்த மாணவி வீடு திரும்பி உள்ளார். அப்போது அந்த மாணவியை வழி மறித்த அல் அமீர், அவரை அங்கிருந்து கடத்தி சென்று வேறு ஒரு இடத்திற்கும் கூட்டி சென்றுள்ளார். அங்கே சில நாட்கள் வைத்து இருந்து, சிறுமியை பல முறை பலாத்காரம் செய்து இருக்கிறார். அதோடு அந்த சிறுமியை மிக கடுமையாக தாக்கியும் இருக்கிறார். இதையடுத்து மறுநாளே அல் அமீருக்கு எதிராக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகார்
சிலர் அந்த சிறுமி அல் அமீர் உடன் ஓடிப்போனதாக கூறினாலும், மைனருடன் மேற்கொள்ளும் உடலுறவு சட்டப்படி பலாத்காரம்தான். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அல் அமீர் குற்றவாளி என்று உறுதியானது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அல் அமீர் கடந்த ஒரு வருடமாக ஜெயிலில்தான் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த 11ம் தேதி அல் அமீர் பெயிலில் வெளியே வந்து இருக்கிறார். பெயிலில் வெளியே வந்த அல் அமீரை அந்த பெண்ணின் குடும்பத்தினர் சந்தித்து பேசி உள்ளனர். இவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்து, அந்த சிறுமியை அல் அமீருக்கே திருமணம் முடிக்க முடிவு செய்துள்ளனர்.

திருமணம்
ஆனால் அல் அமீரை திருமணம் செய்து கொள்ள அந்த சிறுமி சம்மதிக்கவில்லை. இதையடுத்து கட்டாயப்படுத்தி சிறுமியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். அதோடு இந்த திருமணம் நடந்தால் அல் அமீர் வெளியே வந்துவிடுவார். நீ அவருடன் இருக்கலாம். அவர் ஜெயிலுக்கு எல்லாம் போக மாட்டார் என்று பொய் சொல்லி உள்ளனர். இதையடுத்து கடந்த 18ம் தேதி இவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து ஊர்க்காரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோர், அல் அமீர், திருமணத்தை நடத்தி வைத்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications