திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பினராயி விஜயன் மீது தவறான குற்றச்சாட்டு: அமலாக்கப்பிரிவு மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிய வற்புறுத்தியதாக கேரள கிரைம் போலீசார் அமலாக்ககப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்க அமலாக்கப்பிரிவு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Kerala Crime Police have registered a case against the enforcement officers

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., சுங்கத்துறை மற்றும் அமாலக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிரதான குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் பதவிவெறி பிடித்து அலைகிறார்; அவருக்கு நிர்வாக திறமை தெரியாது.. போட்டு தாக்கிய அன்புமணி!ஸ்டாலின் பதவிவெறி பிடித்து அலைகிறார்; அவருக்கு நிர்வாக திறமை தெரியாது.. போட்டு தாக்கிய அன்புமணி!

முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்க அமலாக்கப்பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஸ்வப்னா சுரேஷுடன் காவலுக்குச் சென்ற இரு பெண் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் கேரள முதல்வர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிய வற்புறுத்தியதாக கேரள கிரைம் போலீசார் அமலாக்ககப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்வர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.

English summary
Kerala Crime Police have registered a case against the enforcement officers for forcing them to make false allegations against the Kerala Chief Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X