கணவருடன் தூங்கறதுதான் பெண்களின் வேலை.. சர்ச்சையில் கேரளா கம்யூனிஸ்ட் நிர்வாகி
திருவனந்தபுரம்: உள்ளாட்சி தேர்தல் முடிவில் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சத்தமே இல்லாமல் பாஜக பாலக்காடு நகராட்சியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎம் நிர்வாகி ஒருவர் பெண்கள் வீட்டில் கணவருடன் தூங்குவதற்கு மட்டும்தான் உள்ளனர். அவர்களை வாக்கு பெறுவதற்காக தேர்தலில் எல்லாம் போட்டியிட வைக்கக் கூடாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. கேரளாவில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரையிலான உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் - பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது.

தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு பின்னடைவு
இதையடுத்து தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி வெற்றி பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.
இது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 9 வருடங்களாக ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெண்கள் குறித்து சர்ச்சை
இந்நிலையில் ஆளும் சிபிஎம் கட்சி நிர்வாகி ஒருவரின் பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி மஜீத் தென்னலா பஞ்சாயத்தில் உள்ள ஒரு வார்டில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 666 வாக்குகளை பெற்ற அவர், தன்னை எதிர்த்து வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை தோற்கடித்தார்.
அங்கு நேற்று இரவு வெற்றி பெற்று கட்சியினர் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிபிஎம் தொண்டர்கள், பெண்கள் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் பேசிய சையது அலி, "முஸ்லிம் லீக் கட்சி வாக்கு வாங்குவதற்கான பெண்களை வேட்பாளராக நிறுத்துகிறார்கள். எல்லோருக்கும் திருணமாகி வீட்டில் மனைவி இருப்பார்.
குழந்தை பெற்று கொள்ள மட்டும்
அவர்களை வாக்கு பெறுவதற்காக எல்லாம் வெளியில் அழைத்து வரக்கூடாது. அவர்களை வீட்டிலேயே உட்கார வைத்துவிட வேண்டும். தூங்குவதற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாக்குக்காக திருமணம் செய்த பெண்களை அந்நியர்கள் முன்பு காட்சி படுத்தக்கூடாது. என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகளிரணி தலைவர் எகடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பெண்கள் மீது விமர்சிப்பவர்களை கண்டித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த சையத் அலி, நீங்கள் அரசியலில் இருந்து விமர்சனம் வரத்தான் செய்யும். அதை ஏற்க துணிச்சல் இல்லாவிடின் நீங்கள் இல்லத்தரசியாக வீட்டிலேயே அமர்ந்து கொள்ளுங்கள்." என்று கூறியுள்ளார்.
சர்ச்சை
அவரின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்து வருகிறார்கள். சையது அலிக்கு இந்தமுறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சிபிஎம் கட்சியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேச்சையாக போட்டியிட்டது தெரியவந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications