கொஞ்சம் கொஞ்சமா பிரிந்த டாக்டர் சஹானா உயிர்.. உடம்பே நடுங்குதே.. ஆடிப்போன கேரளா.. வெளியே வந்த ருவைஸ்
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி எடுத்த, பெண் டாக்டர் சஹானா வழக்கில், சக டாக்டர் ருவைஸுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது கேரளா ஹைகோர்ட்.
திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ்.. வசதியான குடும்பம் இல்லாவிட்டாலும், தன்னுடைய ஒரே ஷஹ்னா-வை கஷ்டப்பட்டு எம்பிபிஎஸ் படிக்க வைத்திருக்கிறார்.

திருமணம்: சில வருடங்களுக்கு முன்பு, அப்துல் அசீஸ் இறந்துவிட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்திருக்கிறார் சஹானா.. இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார்.
இவருடன் வேலை பார்க்கும் சக டாக்டர் ருவைஸ் என்பவரும், சஹானாவும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால், வரதட்சணை அதிகமாக கேட்டதாக தெரிகிறது. வரதட்சணையாக 200 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் இதெல்லாம் வேண்டும் என்று கேட்டாராம்.. காதலன் வீட்டில் இதெல்லாம் இருந்தால்தான் கல்யாணம் செய்வோம் என்று கட்டாயப்படுத்தி வந்தார்களாம்..

வரதட்சணை: "அவ்வளவு நகை, பணம் எங்களால் கொடுக்க முடியாது" என்று குடும்ப சூழலை விளக்கியிருக்கிறார்கள்.. ஆனாலும், காதலன், "என் பெற்றோர் கேட்கும் வரதட்சணையை தர முடியாவிட்டால் திருமணம் நடக்காது" என்று கறாராக சொல்லிவிட்டாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த சஹானா, கடுமையான மன உளைச்சலிலும், அதிர்ச்சியிலும் இருந்திருக்கிறார்..
அதனால், சில தினங்களுக்கு முன்பு, சஹானா தன்னுடைய ரூமில் தற்கொலை செய்து கொண்டார்.. ஆபரேஷன் செய்யும்போது, நோயாளிகளுக்கு செலுத்தும் மயக்க ஊசியை, தானே போட்டுக் கொண்டு சஹானா தற்கொலை செய்து கொண்டார். அந்த ரூமில், கடிதம் ஒன்றை சஹானா எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.
கடிதம்: அந்த கடிதத்தில், "இந்த உலகத்தில் அன்பிற்கு, எந்த மரியாதையும் கிடையாது... என் அப்பா போய் விட்டார். கல்யாணத்துக்கு வரதட்சணை கொடுக்க, கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இங்கில்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் இங்கு தேவையாக இருக்கிறது" என்று எழுதியிருந்தார் சஹானா.
இந்த தற்கெலாலை சம்பவம் கேரளாவையே உலுக்கிவிட்டது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து சொன்னபோது, "வரதட்சணை கேட்கும் வரன்களை, பெண்கள் தைரியமாக நிராகரிக்க வேண்டும். அதற்கு பெண்ணின் குடும்பத்தாரும், சமூகமும் முழு ஆதரவை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சஹானா ழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி காவல்துறையினர், கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:
"தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் பல ஏக்கர் நிலத்தை வரதட்சணையாக தர வேண்டும் என பெண் மருத்துவர் சஹானாவிடம் சக அரசு டாக்டர் ருவைஸ் கேட்டிருக்கிறார். அவர் கேட்ட வரதட்சணையை தரும் அளவுக்கு சஹானா வீட்டில், போதிய வசதிகள் இல்லை.

வரதட்சணை: இதையடுத்து, சஹானாவை திருமணம் செய்துகொள்ள ருவைஸ் மறுத்துள்ளார்.. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சஹான தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். ருவைஸ் கேட்ட வரதட்சணையை தன் குடும்பத்தால் வழங்க இயலவில்லை. திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தன் வாழ்க்கையை ருவைஸ் சீரழித்துவிட்டார்" சஹானா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, சஹானாவின் கடிதம் மற்றும் அவரது அம்மா, அண்ணா அளித்த புகாரின்பேரில் ருசைஸ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ருவைஸை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன்: 12ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ருவைஸூக்கு தற்போது ஜாமீன் வழங்கி கேரளா ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் அதிக அளவு படித்த மாநிலம் கேரளா.. கல்விக்கென முக்கியத்துவம் தரப்படும் முதன்மை மாநிலமும்கூட.. கடவுளின் தேசம் என்று புகழப்படும் இந்த கேரளாவில்தான், எத்தனை எத்தனை வரதட்சணை கொடுமைகள்?? எத்தனை எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன???
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications