கேரள லாட்டரி.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்? எந்த ஊரில் வாங்கிய டிக்கெட் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வரும் நிலையில் கடந்த புதன்கிழமைக்கான ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட பிஃப்டி பிஃப்டி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார், எந்த ஊரில் அடித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் லாட்டரி டிக்கெடுகள் விற்பனை செய்யப்படுகிறது. மாநில அரசே லாட்டரி டிக்கெட் விற்பனையை நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் மட்டும் இன்றி தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.40 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் தினமும் விற்பனை செய்யப்படுகின்றன.

முதல் பரிசு இந்த எண்ணுக்கு தான்
புதன் கிழமை மட்டும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இந்த லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்ற நிலையில், குலுக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும். இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 5-வது பரிசாக ஆயிரம், 6 வது பரிசாக ரூ.500 -ம், 7-வது பரிசாக ரூ.100ம் ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரமும் அளிக்கப்படும். இதில் முதல் பரிசாக ரூ.1 கோடி FO 579460- என்ற எண்ணிற்கு கிடைத்துள்ளது.
திரிச்சூரில் விற்கப்பட்ட லாட்டரி
* திரிச்சூரை சேர்ந்த பிஜோய் கே என்ற லாட்டரி ஏஜென்ட் விற்பனை செய்த லாட்டரிக்கு முதல் பரிசு அடித்துள்ளது.
* இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் FX 654292 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. கட்டப்பணா என்ற பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது இந்த லாட்டரி.
* 3-வது பரிசாக 5 ஆயிரம் அடித்த அதிர்ஷ்ட எண்கள்: 1120 2012 2013 2701 2996 3029 4888 5202 6237 6374 6699 6890 7016 7469 7550 7679 7780 7889 8936 9557 9661 9859 9918
* 4 வது பரிசு ரூ.2,000/- 0193 1286 1679 1870 2962 3418 6041 6530 7227 8088 8517 8599
என்ற எண்ணிற்கு அடித்துள்ளது.
கேரள லாட்டரிகளில் பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலிகள், 5 ஆயிரத்திற்கு குறைவான பரிசுத்தொகை என்றால் கேரளாவில் ஏதாவது ஒரு லாட்டரி கடையில் டிக்கெட்டுகளை கொடுத்து பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். 5 ஆயிரத்திற்கு மேல் பரிசுத்தொகை அடித்து இருந்தால் அடையாள சான்றுகளுடன் ஏதாவது ஒரு வங்கி அல்லது கேரள லாட்டரி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்..
விஷு பம்பர் லாட்டரி விற்பனை
கேரளாவில் தற்போது விஷு பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. ரூ.300 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் மே 28 ஆம் தேதி நடைபெறும். லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பரிசுத்தொகை வெல்பவர்களுக்கு 30 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.
பிறகு 10 சதவீதம் ஏஜெண்ட் கமிஷன் செலுத்த வேண்டியிருக்கும். மீதமுள்ள தொகையை லாட்டரியில் பரிசு அடித்தவர்களுக்கு வழங்கப்படும். சம்மர் பம்பர் டிக்கெட்டில் ரூ.10 கோடி பரிசுத்தொகை தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவருக்கு அடித்ததாக தகவல் வெளியானது. எனினும், இது பற்றிய வேறு எந்த தகவலும் இல்லை.
கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும். தமிழகத்தில் லாட்டரிகளை வாங்கி அதாவது கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கினால் அதற்கு கேரள அரசு பரிசுத்தொகையை வழங்க மறுக்கும். வெளி மாநிலத்தவர்களுக்கு ஒருவேளை பரிசு அடித்தால் கேரளாவில் வந்து டிக்கெட் வாங்கியதை ஆவணத்துடன் நிரூபித்தால் மட்டுமே பரிசுத்தொகை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications