திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. சபரிமலை கோயிலில் வெடி விபத்து.. மூன்று பேர் படுகாயம்!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெடி மருந்து நிரப்பும் இடத்தில் இன்று எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இப்போது பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலை கோயிலில் இப்போது மண்டல, மகர விளக்குப் பூஜை விழா நடந்து வருகிறது.

இதற்காகச் சபரிமலை கோயிலில் கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் பெரியளவில்லை இல்லை,
இந்தாண்டு கொரோனா கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், பக்தர்கள் பலரும் மண்டல பூஜை முன்னிட்டு குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அங்குப் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதேபோல அங்கு ஒவ்வொரு ஆண்டும் வெடி வழிபாட்டு நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு வெடிமருந்து நிரப்பும் மையமும் உள்ளது.
இன்றைய தினம் சபரிமலையில் உள்ள வெடிமருந்து நிரப்பும் மையத்தில் வழக்கம் போல வெடி மருந்து நிரப்பும் பணிகள் ஏற்பட்டது. மாளிகைபுரம் அருகே உள்ள இந்த மையத்தில் இன்று மாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு வெடிமருந்து நிரம்பும்போது சிறு வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக நீரைப் பாய்ச்சி தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கோட்டயாம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தொடர்புடையவர்கள் ராஜேஷ், அமல், ஜெயக்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த ஒருவருக்கு 60% தீக்காயமும் மற்ற இருவருக்கு 40% தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் பக்தர்கள் அதிகம் வரும் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் அங்கு சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications