கேரளா வெள்ளம், நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.. தொடரும் மழையால் மீட்பு பணியில் சிக்கல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 27 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. நாளை வரை கேரளாவில் தீவிர மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15, 16 தேதிகளை விட நேற்று மழை குறைவாக இருந்தாலும், இன்னும் முழுமையாக அங்கு மழை நிற்கவில்லை. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழை
அதேபோல் எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு , இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மலையோர மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது. இதனால் கேரளாவிற்குள் ஓடும் நதிகள் எல்லாம் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல அணைகள் கேரளாவில் நிரம்பும் நிலையில் உள்ளன. கேரளாவில் உள்ள பிரபலம் காக்கி அணை இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இடுக்கி அணை
அதேபோல் இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அங்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடமலையார் அணைக்கு நீல அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சோலையார் அணையும் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழை காரணமாக அணைகளில் வெள்ளம் ஏற்பட்டு, எல்லையோர கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

மரணம்
கேரளாவில் ஒரு பக்கம் மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டையம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் இடுக்கியில் மட்டும் 9 பேர் நிலச்சரிவு காரணமாக பலியாகி உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகி உள்ளனர். கோட்டையத்தில் நிலச்சரிவு காரணமாக 13 பேர் பலியாகி உள்ளனர்.

மரணம்
இன்னொரு பக்கம் வெள்ளம் மற்றும் மழை காரணமாக கேரளா முழுக்க 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோட்டயம், இடுக்கியில் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் மண்ணுக்குள் மூழ்கி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்கள் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

அச்சம்
அங்கு இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இப்போது பெய்வது பருவமழை கிடையாது. எதிர்பாராமல் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்கிறது. காலநிலை மாற்றம் இந்த மழைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் தரப்படும் என்று அரசு தரப்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்
கேரளாவில் இதுவரை 1300 குடும்பங்களை சேர்ந்த 5200க்கும் அதிகமான நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 150க்கும் அதிகமான முகாம்கள் உருவாக்கப்பட்டள்ளது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications