திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீரில் மூழ்கிய வீடுகள்.. கழுத்து வரை தண்ணீர்.. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம்.. அதிர்ச்சி தரும் வீடியோஸ்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

Recommended Video

    House Washed Away Video | Kerala Flood 2021 | Kerala Rain | Oneindia Tamil

    கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை! கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை!

    தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது. 19ம் தேதி வரை கேரளாவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு , இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் என்று பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    கேரளா

    கேரளாவில் இருக்கும் முண்டகாயம் பகுதி எப்போதும். மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகும். கடந்த 3 வருடங்களில் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளங்களில் எல்லாம் இந்த பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டது. கோட்டயத்தில் இருக்கும் நகரமாகும் இது. கடந்த 2 நாட்களாக அங்கு விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    முண்டகாயம்

    பல்வேறு வீடுகளுக்குள் அங்கு மழை வெள்ளம் புகுந்துள்ளது. இங்கு இருக்கும் பிரபலமான பாலம் கேரளாவில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் மூழ்குவது வழக்கம் ஆகி உள்ளது. இந்த முறையும் இந்த பாலத்திற்கு மேல் சில அடிகள் வரை வெள்ளம் புரண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த வெள்ளம் காரணமாக வீடுகள் தண்ணீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளா வெள்ளம்

    கேரளாவின் பூஞ்சார் பகுதியில் வெள்ளத்தில் பல பேருந்துகள் மூழ்கின. இது கேரளாவில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தண்ணீரில் மூழ்கிய கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஒன்றை மக்கள் சேர்ந்து இழுத்தது வீடியோவாக வெளியாகி உள்ளது. இங்கு பல இடங்களில் கழுத்து வரை தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இடுக்கி நிலச்சரிவு

    கேரளாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் அதிகாரபூர்வமாக பலியாகி உள்ளனர். இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் இதுவரை 7 பேர் அதிகாரபூர்வமாக பலியாகி உள்ளார். கடந்த 2020ல்தான் இடுக்கியில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 60 பேர் வரை பலியானார்கள். அதேபோன்று மீண்டு அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்வதால் நிலச்சரிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பத்தினம்திட்டா x

    பத்தினம்திட்டாவிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக சாலை முழுக்க தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கு தாழ்வான பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Kerala Flood: Horrifying videos from many districts in the state due to heavy rain for the past 3 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X