’கோல்ட் ஃபிங்கர்’ பட பாணி கடத்தல்..கேரளாவில் 2.5 கிலோ தங்கம் அபேஸ்! கொள்ளையனுக்கு 50 கே ஃபாலோயர்ஸ்!
திருவனந்தபுரம் : கேரளாவில் கோல்ட் ஃபிங்கர் பட பாணியில் நெடுஞ்சாலையில் ஓடும் காரை மறித்து 2 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரோஷன், பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் என்பதும், அவரை சுமார் 50,000 பேர் பின் தொடர்வதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தங்க வியாபாரியான அருண் சன்னி தனது நண்பருடன் கோயம்புத்தூர் சென்று அங்கு சுமார் இரண்டரை கிலோ தங்க நகைகளை கொள்முதல் செய்து காரில் திருச்சூருக்கு திரும்பிச் சென்றிருந்தார்.

பட்டிக்காடு பகுதியில் கல்லிடைக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 544ல் அருண் வந்து கொண்டிருந்த போது சுமார் மூன்று வாகனங்களில் நீண்ட தூரம் அவர்களை பின் தொடர்ந்து வந்த கும்பல் காலை காரை வழிமறித்தது.
தொடர்ந்து காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் கத்தி முனையில் தங்க நகைகளை கேட்டு மிரட்டியுள்ளது. தொடர்ந்து நகைகளை தர அருண் மறுத்ததால் அந்த கும்பல் தங்க நகைகளுடன் இருவரையும் கடத்திச் சென்றது.
தொடர்ந்து தங்கம் இருந்த காரையும் எடுத்துக்கொண்ட அந்த நபர்கள் சிறிது தூரம் சென்றனர் புதூர் மற்றும் மரத்தக்கரை அருகே சாலையோரம் அருண் மற்றும் அவரது நண்பரை அந்த கும்பல் விட்டு விட்டு சென்றது. காலை சுமார் 11 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற நிலையில் கொள்ளை சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் காருக்கு பின்னால் வந்த வாகனத்தின் சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் வாகனத்தின் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். ஆனால் அது போலியானது என தெரிய வந்ததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. மேலும் காரில் தங்கம் வரும் தகவலை கொள்ளை கும்பலுக்கு அளித்தவர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே குத்திரன் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த சித்திக், நிஷாந்த், நிகில் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திய போது இவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. காரில் தங்கத்தை கடத்தி செல்ல மூளையாக செயல்பட்டது பந்தனம்திட்டா அருகேயுள்ள திருமூலபுரத்தைச் சேர்ந்த ரோஷன் வர்கீஸ் என்பதும் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரண்டரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.
குறிப்பாக ரோஷன் வர்கீஸ் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமானவர் என்பதும். அவரை சுமார் 50,000 பேர் பின் தொடர்வதும் தெரியவந்துள்ளது. ஆனாலும் ரோஷன் ஒரு மோசமான திருடன் என்பது அவரது ஃபாலோயர்களுக்கு தெரியாது. 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரோஷன் மீது 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அது மட்டுமில்லாமல் ரோஷனின் குற்ற பின்னணி கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட பல மாநில நெடுஞ்சாலைகளில் கொள்ளை வழக்குகளில் நீண்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
ரோஷன் மீது திருவள்ளார், கங்கனாச்சேரி, சேர்த்தலா ஆகிய காவல் நிலையங்கள் 22 வழக்குகள் நிறுவையில் இருக்கின்றன. மேலும் ஷிஜோவ் மீது ஒன்பது வழக்குகளும், சித்திக் மீது எட்டு வழக்குகளும், நிஷாந்த் மீது ஒரு வழக்கும் உள்ளது. குறிப்பாக நிக்கில் மீது 12 வழக்குகள் இருக்கிறது, தற்போது சிஜோம் வர்கீஸ்ம் சித்திக், நிஷாந்த் நிகில்நாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரோஷன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications