நாட்டிலேயே முதல்முறையாக கேரளா அரசு சூப்பர் உத்தரவு.. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பில் அதிரடி சலுகை
திருவனந்தபுரம்: தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் ஆறு மாத மகப்பேறு விடுப்பு வழங்கும் முறை இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் அமலுக்கு வந்துள்ளது.
அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 6மாத கால பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலனை செய்த கேரளா அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளத்துடன் பேறு கால விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகபேறு விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் விடுமுறை மற்றும் சிகிச்சைக்காக ரூ.3500 ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக தனியார் கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளித்து அசத்தி உள்ளது கேரளா.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications