சொல் அல்ல செயல்... கேரளாவில் ஆளுநர் ஆரிப்கான் கலா மண்டலம் பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து நீக்கம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் கலா மண்டலம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப்கானை அதிரடியாக நீக்கி உள்ளது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு.
கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஜனநாயக அரசை செயல்படவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான். வலதுசாரி சித்தாந்த கருத்துகளுடன் மாநில நிர்வாகத்தை முடக்கி வைக்கும் செயல்களில் தொடர்ந்து ஆரிப் முகமது கான் ஈடுபட்டு வருகிறார்.

ஆரிப்-க்கு எதிராக போராட்டம்
கேரள மாநில பத்திரிகையாளர்களையும் தொடர்ந்து மிரட்டி வந்தார் ஆரிப் முகமது கான். இதனைத் தொடர்ந்து ஆரிப் கானுக்கு எதிராக கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. கேரளா ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆரிப் கானை வாபஸ் பெற வேண்டும் என்று அம்மாநிலத்தின் பொதுவான கோரிக்கை.

அதிரடி முடிவு
இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கம் செய்யக் கூடிய மசோதாவுக்கு கேரளா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதேபோல் தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் மாநில அரசுகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன. இந்த வரிசையில் கேரளாவும் இணைந்தது.

வேந்தர் பதவியில் இருந்து நீக்கம்
அத்துடன் நிற்காமல் இப்போது கேரளா மாநில அரசு அதிரடியாக செயலிலும் இறங்கிவிட்டது. கேரளாவின் கலா மண்டலம் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். 1927-ம் ஆண்டு கேரளாவின் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க தொடங்கப்பட்டது கலா மண்டலம். தற்போது கலா மண்டலமானது ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக விரிந்து நிற்கிறது.

கலா மண்டலம் பின்னணி
கேரளா கலாசார, பண்பாட்டு அடையாள முகமாக விளங்குகிறது கலா மண்டலம். மறைந்த பிரதமர்கள் நேரு, இந்திரா, விபிசிங் உள்ளிட்டோர் கலா மண்டலத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த கலா மண்டலத்தின் நிதி ஆதார நல்கை- ஸ்பான்சர்தான் வேந்தர் யார் என்பதை தீர்மானிக்க முடியும் என்பது இப்பல்கலையின் சரத்து. இதன்படி கேரளா மாநில அரசுதான் இப்பல்கலைக் கழகத்துக்கு ஸ்பான்சர். அதனால் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கிவிட்டது கேரளா இடதுசாரி அரசு. சொல் அல்ல செயல்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications