'28 நாட்கள் கால இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசி..' மத்திய அரசுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கோவிஷீல்ட் தடுப்பூசியை 28 நாட்கள் கால இடைவெளியில் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் கோவின் தளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கொண்டே பெரும்பாலும் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவாக்சின் 4 முதல் 6 வாரக் கால இடைவெளியிலும், கோவாக்சின் 12 முதல் 16 வாரக் கால இடைவெளியிலும் செலுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் மற்றும் கிடெக்ஸ் சில்ட்ரன்ஸ்வேர் ஆகிய 2 நிறுவனங்களும் வெளிநாடுகளுக்குச் செல்வோரும் கோவிஷீல்டு கால இடைவெளியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் எனக் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

அந்த மனுவில், "இந்தியா போன்ற ஒரு நாட்டில், கணிசமான மக்கள் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை, தினசரி நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காலத்தின் தேவை கருதி அனைவருக்கும் வேகமாக வேக்சின் போடும் பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பிபி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு தடுப்பூசி


தனது 5000 ஊழியர்களுக்கு முதல் டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிடெக்ஸ் கார்மென்ட்ஸ், தற்போது 2ஆம் டோஸ் வேக்சின் போட ரூ 93 லட்சம் செலவில் கோவிஷீல்டு வாங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் மத்திய அரசின் நெறிமுறைகளால் வேக்சின் போட முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த வாதத்திற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்த மத்திய அரசு, தடுப்பாற்றல் அதிகரிப்பதாக வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

Recommended Video

    C.1.2 அடுத்த உருமாறிய Corona.. Vaccine-க்கு கட்டுப்படாது.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
    நீதிபதி தீர்ப்பு

    நீதிபதி தீர்ப்பு

    வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "மத்திய அரசு கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ் கால இடைவெளியை முதலில் வெளிநாட்டில் கல்விக்காகவும் வேலைக்காகவும், விளையாட்டு வீரர்களுக்காகவும் குறைத்திருந்தது. பின்னர் இந்த சலுகை வெளிநாடுகளில் அரசு சார்பில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இந்திய அரசு அதிகாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

    மத்திய அரசுக்கு உத்தரவு

    மத்திய அரசுக்கு உத்தரவு

    எனவே, மத்திய அரசு கோவின் போர்ட்டலில் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார், இது கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2ஆவது டோஸை 4 வாரங்களுக்குப் பிறகு எடுக்க விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும். அதேநேரம் அரசு இலவசமாக அளிக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் ஒருவருக்குக் கால இடைவெளியை முடிவு செய்யும் உரிமை உள்ளதா என்பதை நான் இதில் கருத்தில் கொள்ளவில்லை" என்றார். அதாவது இந்த வேக்சின் கால இடைவெளி குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு தனியார் மையங்களில் மட்டும் பொருந்தும்" என தீர்ப்பளித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+