சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு! எருமேலியில் வரப்போகும் மாற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியிருக்கிறது. சுவாமி தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ரசாயன குங்குமம் மற்றும் ஷாம்பு பாக்கெட்களை விற்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
முன்னதாக ரசாயன குங்குமத்திற்கும், ஷாம்புக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சபரிமலை/எருமேலியில் கடைகளை நடத்துபவர்கள் இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், இந்தத் தடை தங்கள் வணிகத்தை பாதிக்கும் என்பதால், அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

மேலும், "சபரிமலை மரபுகளின் ஒரு பகுதியாக குங்குமம் இன்றியமையாதது. இரசாயன குங்குமம் தடை செய்யப்பட்டால், ஏற்கனவே குங்கும சப்ளையர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், அதில் இரசாயனம் உள்ளதா என்பதை அறிய அறிவியல் ஆதாரம் இல்லை" என்று கூறியிருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி. ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் நீதிபதிகள் கூறியதாவது, "ஒரு கடையில் வணிகம் செய்வதற்கான குத்தகை பெற்றுவிட்டால், இரசாயனம் கலந்த குங்குமத்தை விற்கலாம் என்று அனுமதிக்க முடியாது. இயற்கையான குங்குமம் விற்பதற்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. கடைக்காரர்கள் குங்குமம் விற்க விரும்பினால், அது இயற்கையாகவே பெறப்பட்டது, இரசாயனம் கலந்தது அல்ல என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இரசாயன குங்குமத்தை சன்னிதானம் அல்லது எருமேலி பகுதியில் விற்க எந்தக் காரணத்திற்காகவும் அனுமதிக்கப்படாது.
சபரிமலையின் சுற்றுச்சூழல் மற்றும் பக்தர்களின் நலனே முதன்மையானது. வணிக நோக்கங்கள் எங்களுக்கு முக்கியம் இல்லை. இரசாயனம் கலந்த குங்குமத்திற்குப் பதிலாக, பாரம்பரிய மற்றும் இயற்கையாகக் கிடைக்கும் குங்குமத்தை மட்டுமே விற்க வேண்டும். நீங்கள் ஒரு விநியோகஸ்தரிடமிருந்து குங்குமத்தைப் பெறும்போது, அது பாரம்பரியமானதா அல்லது ரசாயனம் கலந்ததா என்று கேளுங்கள். சந்தேகம் இருந்தால், விற்காதீர்கள். மீறி விற்றால், உங்கள் குத்தகை ரத்து செய்யப்படும்.
என்னுடைய கடையில் விற்கப்படும் அனைத்து குங்குமமும் இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து பெறப்பட்டவை என்று அதிகாரிகளிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்" என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இரசாயனம் கலந்த குங்குமத்தில் காப்பர் சல்பேட் பச்சை, லெட் ஆக்சைடு, கார்பன் பிளாக், அலுமினியம் ப்ரோமைட், ரெட் மெர்குரி சல்பைட் (வெர்மிலியன்), அசோ சாயங்கள், பிரஷியன் ப்ளூ மற்றும் கோபால்ட் கலவைகள் இருப்பதாக நீதிமன்றம் குற்றம்சாட்டி இருக்கிறது. இத்தகைய இரசாயனங்கள் தோல் நோய்கள், கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், உடல் நச்சுத்தன்மை மற்றும் நீண்டகால புற்றுநோய் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இந்த ரசாயனங்கள் நீர்நிலைகளில் கலக்கும்போது, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், கேரளாவின் நன்னீர் இனங்கள் குறிப்பாக பாதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவு மூலம் இனி சபரிமலையில் ரசாயன குங்கும் விற்பனை முடிவுக்கு வரும் என்றும், பக்தர்களின் நலன் பாதுகாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications