கேரளாவில் ஆட்டம் போடும் காங்கிரஸ்.. போராட்டத்தில் சிபிஎம் அமைச்சர் மீது தாக்குதல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் எல்லையை மீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. காங்கிரஸுக்கு எதிரி பாஜகதான். ஆனால், கேரளாவில் சிபிஎம்-க்கு எதிராக அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சிபிஎம் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
போராட்டக்காரர்கள், திடீரென அமைச்சரை நெருங்கி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?
நேற்று கண்ணூர் ரயில் நிலையத்திற்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் வந்திருந்தார். அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மாணவர் அமைப்பினர், திடீரென அமைச்சரை நெருங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அமைச்சரின் கை, கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக உடனடியாக அமைச்சர், கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் மறுப்பு
ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் 30-35 போலீசார் இருந்ததாகவும், ஆனால் போராட்டக்காரர்கள் 4-5 பேர்தான் இருந்தார்கள் என்றும், எனவே எப்படி தாக்குதல் நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மட்டுமல்லாது தேர்தல் நெருங்குகிறது என்பதால், அனுதாபத்தை பெற இப்படி நடிப்பதாகவும் அமைச்சர் மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறது.
பழிவாங்கிய அமைப்பு
அமைச்சர் மீதான தாக்குதல் காரணமாக, அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போராட்டம், அதைத் தொடர்ந்து நடந்த தாக்குதல் காரணமாக கண்ணூரில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. காங்கிரஸ் மாணவர் அமைப்பை பழிவாங்க, கண்ணூரில் உள்ள காங்கிரஸின் கொடி கம்பத்தை இடதுசாரி அமைப்பினர் சேதப்படுத்தியிருக்கின்றனர்.
வீணா ஜார்ஜுக்கு என்ன ஆனது?
வீணா ஜார்ஜ் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு நேற்று இரவு 10 மணியளவில் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதால், வலது கையில் உணர்வின்மை ஏற்பட்டதாகவும், இடது கையிலும் லேசான பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஆர்.ஐ ஸ்கேனில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு மருத்துவக் குழு கூடி, அமைச்சருக்குத் தேவையான சிகிச்சை குறித்து முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications