4 ஆண்டுகளாக கிடப்பில் ஹேமா கமிட்டி அறிக்கை.. கேரளா இடதுசாரி அரசை வெளுத்தெடுத்த ஹைகோர்ட்!
கேரளாவில் முன்னணி நடிகையை ஒரு கும்பல் 2017-ம் ஆண்டு காரில் கடத்தி பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கேரளாவின் முன்னணி நடிகைகள் ஒன்று சேர்ந்து, மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவானது முன்னணி நடிகைகள், பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட 55 பேரிடம் விசாரணை நடத்தி அறிக்கையாக தயார் செய்தது. இந்த அறிக்கை 2019-ம் ஆண்டே கேரளா மாநில அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் கேரளா மாநில அரசு ஹேமா கமிட்டி அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை.
இதனையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து விவரங்கள் கேட்கப்பட்டன. இதனால் ஹேமா கமிட்டி அறிக்கையை பகிரங்கப்படுத்த தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில்தான் ஹேமா கமிட்டி அறிக்கையும் வெளியாகி மலையாள திரை உலகை மட்டுமல்ல இந்திய சினிமாவையே புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கையில் முன்னணி நடிகர்கள் பலர் மீதும் பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் நடிகை ரோஹினி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ஹேமா கமிட்டி தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசை மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான கேரளா உயர்நீதிமன்றத்தின் கருத்துகள்:
- 4 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
- ஹேமா கமிட்டி அறிக்கையை சீலிட்ட கவரில் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
- திரை உலகம் மட்டுமல்லாது பொது இடங்களில் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தது?
- அமைப்புசாரா தொழில்களில் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கேரளா அரசு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்
- ஹேமா கமிட்டி தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தக் கூடாது
- ஹேமா கமிட்டி அறிக்கையை முன்வைத்து ஊடகங்கள் விசாரணை நடத்தக் கூடாது. ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது; ஆனால் ஊடகங்களுக்கு எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications