"பெண்ணின் நிர்வாண உடல்.." எப்போதும் அதை பாலியல் ரீதியாக கருதக் கூடாது.. கேரள ஐகோர்ட்! என்ன மேட்டர்
திருவனந்தபுரம்: ஒரு பெண்ணின் நிர்வாண உடலை எப்போதும் பாலியல் ரீதியாகவோ அல்லது ஆபாசமாகவோ பார்க்கக்கூடாது என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், பெண் மீதான நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை ரத்து செய்ததது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைவதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனது குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வழங்கவும் ஆணாதிக்கக் கருத்துக்களை உடைக்கும் வகையிலேயே இந்த வீடியோவை எடுத்ததாக அந்த பெண் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அந்த வீடியோவை ஆபாசமானதாக கருத முடியாது என தெரிவித்துள்ளது.
கேரளா ஐகோர்ட்: இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "பெண்ணின் மேல் உடலை நிர்வாணமாக பார்ப்பதை பாலியல் ரீதியாக கருதப்படக்கூடாது. மேலும், ஒரு பெண்ணின் நிர்வாண உடலை சித்தரிப்பதையே ஆபாசமானதாகவோ, அநாகரீகமாகவோ அல்லது பாலியல் ரீதியாக கருத முடியாது. அதன் சூழலை கருத்தில் கொண்டே முடிவு செய்ய முடியும்.
ஆணின் உடல் அரிதாகவே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, அதே சமயம் பெண்களின் உடல் அமைப்பு ஆணாதிக்க அமைப்பில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. இதனால் பெண்கள் பல கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அவர்கள் தங்கள் உடல் மற்றும் வாழ்க்கை குறித்து சுயமாக தேர்வு செய்யும் போது பெண்கள் மீது வன்முறை காட்டப்படுகிறது, பாகுபாடு காட்டப்படுகிறார்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்
இரட்டை நிலைப்பாடு: ஆண் மற்றும் பெண் உடல்கள் குறித்து சமூகத்தில் உள்ள இரட்டை நிலைப்பாடே இருக்கிறது. நிர்வாண உடல்களை சாதாரணமாக பார்க்கும் வகையில் குழந்தைகளை தனது உடலில் ஓவியம் வரைய தாய் அனுமதிப்பது தவறில்லை. கலையின் ஒரு பகுதியாக ஒரு தாய் தனது உடலின் மீது குழந்தைகளை ஓவியம் வரைய அனுமதித்ததை பாலியல் செயலாக அல்லது பாலியல் நோக்கத்திற்காக செய்யப்பட்டதாக கருத முடியாது.
இதை வைத்து குழந்தைகளை பாலியல் செயலில் பயன்படுத்துவதாக சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையது இல்லை. குழந்தைகள் ஆபாசப் படங்களுக்குப் பயன்படுத்தியதாக கூற முடியாது. அந்த வீடியோவில் பாலியல் ரீதியாக எதுவும் இல்லை. பெண்ணின் உடல் பாலியல் ரீதியாக பார்க்கப்படுவதை எதிர்த்தே இந்த வீடியோவை எடுத்ததாக அந்த பெண் தெளிவாக கூறியுள்ளார். நிர்வாணத்தை அடிப்படையிலேயே ஆபாசமாக அல்லது அநாகரீகமாக வகைப்படுத்துவது தவறு..
ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் உரிமைக்காகப் போராடிய மாநிலம் இது (கேரளா). இப்போது நாட்டில் பல கோயில்களில் சுவரோவியங்கள், சிலைகள் அரை நிர்வாணமாக உள்ளது. அவை கலையாகவும் புனிதமாகவும் கருதப்படுகின்றன. எல்லா பெண் தெய்வங்களின் சிலைகளும் வெறும் மார்போடு இருந்தாலும், கோயிலில் பிரார்த்தனை செய்யும் போது, நமக்கு தெய்வீக உணர்வு தான் இருக்கும்.
கேரளா: ஆண்கள் மற்றும் பெண்களின் நிர்வாணத்தில் சமூகத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்கிறது. கேரளாவின் திருச்சூரில் நடக்கும் 'புலிகலி' திருவிழாக்களில் ஆண்கள் உடல்களில் ஓவியம் வரைவது ஏற்று கொள்ளப்பட்ட பாரம்பரியமாக உள்ளது.. ஆணின் உடல் சிக்ஸ் பேக் உடன் எல்லாம் காட்சிபடுத்தப்படுகிறது. சட்டை அணியாமல் ஆண்கள் நடமாடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் இவை ஆபாசமானதாகவோ அநாகரீகமாகவோ கருதப்படுவதில்லை.
ஒரு ஆணின் அரை நிர்வாண உடல் சாதாரணமாக கருதப்படுகிறது. ஆனால், பெண்ணின் உடல் அப்படி நடத்தப்படுவதில்லை. பெண்ணின் நிர்வாண உடலை பாலுறவு மட்டும் அல்லது ஆசைப் பொருளாகக் கருத சிலர் பழகிவிட்டனர். பெண் நிர்வாணம் தடை செய்யப்பட்டுள்ளதாக இங்கே பார்வை இருக்கிறது. ஏனெறால் சிலர் பெண்களை பாலியல் ரீதியாக மட்டுமே பார்கிறார்கள். இதுதான் சமூகத்தில் நிலவும் இரட்டை நிலைப்பாடு" என்றார்.
அந்த பெண் மீது போக்சோ சட்டம், ஐடி சட்டம், குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் ஆகிய பிரவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். மூன்று புகார்களிலும் முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications