கேரளா நரபலி கேஸில் ஷாக்..சூனியக்காரி லைலாவுடன் வாழ பகவல் சிங்குக்கும் ஸ்கெட்ச் போட்ட மந்திரவாதி ஷபி!
திருவனந்தபுரம்: இந்தியாவையே உலுக்கியிருக்கும் கேரளா நரபலி வழக்கில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நரபலி கொடுத்த வழக்கில் சிக்கிய மந்திரவாதி ஷபி (ஷாஃபி), (ஷாபி) மற்றொரு குற்றவாளியான லைலாவுடன் இணைந்து குடும்பம் நடத்த பகவால்சிங்கை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.
கேரளாவில் காணாமல் போன தமிழகத்தைச் சேர்ந்த பத்மா, ரோஸ்லி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த இரு பெண்களும் மந்திரவாதி ஷபியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஷபி தொடர்பாக போலீசார் விசாரித்த நிலையில் நாட்டையே உலுக்கிய நரபலி சம்பவங்கள் அம்பலமாகின.

நரபலி, நரமாமிசம் அம்பலம்
எர்ணாகுளத்தைச் சேர்ந்த பகவல் சிங் அல்லது பகவான் சிங்- லைலா ஆகியோருக்காக பத்மா, ரோஸ்லி இருவரும் நரபலி கொடுக்கப்பட்டனர்; நரபலி கொடுக்கவே பத்மாவையும் ரோஸ்லியையும் ஷபி கடத்தி வந்தார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பகவல் சிங், லைலா, ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இரு பெண்களையும் நரபலி கொடுத்த கையோடு அவர்களை உடல்களை வெட்டி பச்சை மாமிசம்- நரமாமிசம் சாப்பிட்டதும் தெரியவந்தது.

லைலா-ஷபி தகாத உறவு
இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மந்திரவாதி ஷபிக்கும் சிக்கிய லைலாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. பகவல் சிங்குக்கு தெரியாமல் இருவரும் தனி ஒரு தகாத உறவு வாழ்க்கை வந்துள்ளனர். இனியும் இந்த தகாத உறவு வாழ்க்கை வேண்டாம்; பகிரங்கமாக சேர்ந்து வாழ்வோம் என முடிவு செய்த ஷபியும் லைலாவும் பகவல்சிங்கை போட்டுத் தள்ளவும் ஸ்கெட்ச் போட்டிருந்தனராம்.

போலீசில் ஒப்புதல் வாக்குமூலம்
2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு பூஜைகள் அத்தனையும் பிரச்சனை இல்லாமல் முடிந்த பின்னர் பகவல்சிங்கை கொல்லவும் லைலாவிடம் ஷபி திட்டம் வகுத்துக் கொடுத்திருந்தாராம். இதனால் 2 பெண்களைத் தொடர்ந்து பகவல்சிங்தான் அடுத்த டார்க்கெட்டாக இருந்தாராம். இதனை போலீசார் நடத்திய விசாரணையில் ஷபி ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஷபியின் இந்த வாக்குமூலம் கேரளா போலீசாரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பகவல்சிங் குடும்பம் அதிர்ச்சி
இதனிடையே பகவல்சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், மனைவி இறந்த பின்னர் லைலாவை பகவல்சிங் திருமணம் செய்தார். அப்போது முதலே பூஜைகள் செய்ய சொல்லி லைலா துன்புறுத்தி வந்தார். இதனால் லைலாவுடன் ஒட்டுமொத்த குடும்பமும் உறவை துண்டித்துக் கொண்டது. எர்ணாகுளத்தில் பெயர் பெற்ற வைத்தியர் குடும்பம் இப்போது அவமானப்பட்டு வீதியில் நிற்கிறது என்கின்றனர் விரக்தியுடன்.












Click it and Unblock the Notifications