திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹனி டிராப்.. "தனிமையில் சந்திக்கலாம்"னு அழைத்த இளம்பெண்! துள்ளி குதித்த தொழிலதிபர்! ஆடைகளை கழற்றி...

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராமில் அறிமுகமான தொழிலதிபரை ஏமாற்றியதாக கேரளாவில் தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவு என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் பழக்கமாகவும் மாறியது.

இந்த நிலையல் அந்த பெண்ணிடம் அந்த தொழிலதிபர் பேச்சை தொடங்கினார். அப்போது தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் தனது கணவர் கோகுல் தீப் துபாயில் வேலை செய்து வருகிறார் என்றும் தேவு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்

துபாய்

துபாய்

கணவர் துபாயில் இருப்பதால் உடல்நிலை சரியில்லாத தாயுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய தொழிலதிபர் , உன் போட்டோவை அனுப்பு என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் தனது கவர்ச்சிகரமான போட்டோவை அனுப்பியுள்ளார். அந்த போட்டோவை பார்த்ததிலிருந்து தொழிலதிபர் அவர் அவராகவே இல்லை.

பெண்ணை சந்திக்க ஆசை

பெண்ணை சந்திக்க ஆசை

இதனால் அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணோ நான் பாலக்காட்டில் யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இருக்கிறேன. என்னால் எனது தாயை விட்டுவிட்டு தனியாக வர முடியாது. நீங்கள் வேண்டுமானால் வாருங்கள் என அழைத்துள்ளார்.

முகவரி

முகவரி

இதை நம்பி அந்த பெண் கூறிய முகவரிக்கு தொழிலதிபர் சென்றுள்ளார். அப்போது அந்த வீடு ஏதோ காட்டுக்குள் இருப்பது போல் தனியாக இருந்தது. அங்கு சென்ற தொழிலதிபரை அந்த பெண் வரவேற்றார். பின்னர் வீட்டில் தனியாக ஒரு அறைக்கு அந்த நபரை அழைத்து சென்றார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

5 பேர் கொண்ட கும்பல்

5 பேர் கொண்ட கும்பல்

அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர்கொண்ட கும்பல் தொழிலதிபரை தாக்கி அவரது ஆடைகளை கழற்றி ஆபாச வீடியோவையும் போட்டோவையும் எடுத்துள்ளனர். பின்னர் நாங்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வீடியோவை வெளியே விட்டுவிடுவோம் என மிரட்டினர்.

 4 சவரன் சங்கிலி

4 சவரன் சங்கிலி

அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலி, செல்போன், ஏடிஎம் கார்டு, கார், ரூ 10 ஆயிரம் ரொக்கம், காரில் இருந்த சில ஆவணங்களையும் பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளது. மேலும் அந்த கும்பல் அவரிடம் பணம் கேட்டது. அதற்கு அவர் வீட்டிற்குச் சென்றால்தான் பணத்தை எடுக்க முடியும் என கூறவே அந்த நபரை கொடுங்கல்லூருக்கு அவரது காரிலேயே அழைத்து சென்றுள்ளனர்.

பாதி வழியில் தப்பிய தொழிலதிபர்

பாதி வழியில் தப்பிய தொழிலதிபர்

அப்போது பாதி வழியில் அந்த காரில் இருந்து தொழிலதிபர் கீழே குதித்து அங்குள்ள பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இன்ஸ்டாகிராம் பிரபலம் கண்ணனூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவு, சரத் (24), அஜித் (20), வினய் (24), ஜிஸ்னு (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் இது போல் பணக்காரர்களை மயக்கி தனியே வரவழைத்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து மிரட்டி மிரட்டியே பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

English summary
Kerala instagram couple arrested for honey trapping a industrialist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X