கேரளா லாட்டரியில் கொட்ட போகுது அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் 2 பேருக்கு கோடிகளில் முதல் பரிசு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள லாட்டரி டிக்கெட்டுகளில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டிற்கான நேற்று குலுக்கல் நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் நேற்றைய பாரத் பந்த் காரணமாக குலுக்கல் நடைபெறவில்லை. இதனால் இன்று உள்ள லாட்டரி டிக்கெட்டிற்கும் சேர்த்து இன்று குலுக்கல் நடைபெறுகிறது. ஒரே நாளில் 2 லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுவதால் கேரள லாட்டரி பிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகள் ரொம்பவே பிரபலம். அங்கு லாட்டரி டிக்கெட்டுகளை மாநில அரசே ஏற்று நடத்தி வருகிறது. பல கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் வருடத்திற்கு 6 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

kerala-lottery-draw-for-two-tickets-to-be-held-on-the-same-day-today

கேரளா லாட்டரி

அது போக தினம் தோறும் அங்கு லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறுவது வழக்கம். தற்போது பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பாக்யதாரா, ஸ்ரீசக்தி, தனலட்சுமி, காருண்யா பிளஸ், சுவர்ண கேரளம், காருண்யா லாட்டரி , சம்ருதி லாட்டரி என வாரத்திற்கு ஏழு நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.

முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் என்பதால் லாட்டரி பிரியர்கள் பலரும் வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களுக்கும் பரிசுத்தொகை அடித்துவிடாதா? என்ற ஆர்வத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் லாட்டரிக்கு தடை உள்ளதால், தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.

தனலட்சுமி லாட்டரி டிக்கெட்

எனினும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு பணி நிமித்தமாகவும்தொழில் நிமித்தமாகவும் செல்லும் போது ஒரு சிலர் ஆர்வத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. பல லட்சம் லாட்டரிகளில் ஒரே ஒரு டிக்கெட்டிற்கு மட்டுமே முதல் பரிசு என்பதால், இந்த டிக்கெட்டுகளில் வருமானம் கொட்டுவது என்னமோ கேரள அரசுக்குதான்..

ஏதோ ஒரு சிலருக்கு பரிசு அடிக்க பல லட்சம் பேர் டிக்கெட் வாங்கிய தொகை கூட மிஞ்சாமல் ஏமாந்துதான் போகிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். கேரள லாட்டரி டிக்கெட்டுகளில் நேற்று தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் நேற்றைய பாரத் பந்த் காரணமாக குலுக்கல் நடைபெறவில்லை. இதனால் டிக்கெட் குலுகல் இன்று நடைபெறுகிறது.

இன்று 2 குலுக்கல்

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. வழக்கமாக இன்று (வியாழக்கிழமை) காருண்யா பிளஸ் கே என் 580 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் பிற்பகல் 3 மணிக்கு திருவனந்தபுரம் லாட்டரி டிக்கெட் அலுவலகத்தில் குலுக்கல் நடைபெறுகிறது. ஒரே நாளில் இரண்டு டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறுவதால் இன்று இரண்டு பேருக்கு முதல் பரிசு அடிக்க போகிறது. இரண்டு பேருக்கு இன்று பரிசு அடிக்க போவதால் கேரள லாட்டரி பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+