Kerala lottery: கேரள லாட்டரியில் 30 லட்சம் பரிசு.. மறந்துபோன உரிமையாளர்! கேரள வியாபாரி செய்த காரியம்! என்ன மனுஷன்யா!
திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் பிஜு என்பவருக்கு ரூ.30 லட்சம் பரிசு அடித்துள்ளது. ஆனால் மகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்ததால், லாட்டரி டிக்கெட்டையே மறந்துபோன பிஜுக்கு, ரூ.30 லட்சம் பரிசு விழுந்ததை நேர்மையாக தெரிவித்து பணத்தை பெற்றுத்தந்த கேரள லாட்டரி விற்பனையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சஜித். பரப்பள்லி கும்பாலா பகுதியில் லாட்டரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வாடிக்கையாளரான பிஜு என்பவர், அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு சஜித்திடம் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். பிஜுவின் மகளுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டதால், தனது மகளின் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தங்கியிருந்துள்ளார்.

லாட்டரியில் ரூ.30 லட்சம் பரிசு
சிகிச்சை செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த பிஜுவுக்கு உள்ளூர் மக்கள் சேர்ந்து நிதி திரட்டி மருத்துவ சிகிச்சைக்கு செலவுக்கு உதவி வந்துள்ளனர். இந்த சூழலில் தான், பிஜு லாட்டரி வியாபாரியான சஜித்திற்கு போன் செய்து தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டில் 3 டிக்கெட்டுகளை தனக்காக எடுத்து வைக்குமாறு கூறியுள்ளார். ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட இந்த டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும்.
லாட்டரி டிக்கெட்டிற்கான பணத்தையும் பிஜு வழங்கவில்லை. மகளின் சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருந்ததால், வாட்ஸ் அப்பில் சஜித் அனுப்பிய லாட்டரி டிக்கெட் எண்ணை கூட பிஜு கவனிக்கவில்லையாம். இந்த சூழலில்தான், பிஜுவுக்காக எடுத்து வைத்த டிக்கெட் ஒன்றிற்கு 2 ஆம் பரிசாக ரூ.30 லட்சம் அடித்துள்ளது. பிஜு லாட்டரி வாங்க பணமும் கொடுக்கவில்லை.. எந்த டிக்கெட் என்ற விவரத்தையும் பார்க்கவில்லை..
நேர்மையாக பணத்தை கொடுத்த சஜித்
அப்படி இருந்தும் கூட சஜித் நேர்மையாக பிஜுவுக்கு போன் செய்து 30 லட்சம் பரிசு அடித்த விவரத்தை கூறியுள்ளார். மகளின் சிகிச்சைக்காக தடுமாறிய பிஜுவுக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததைவிட சஜித்தின் நேர்மை கடவுள் போல வந்து கை கொடுத்துள்ளது. சஜித்தின் இந்த நேர்மையான செயல் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிஜு கூறுகையில், "மருத்துவமனையில் இருந்த அவசரத்தில் லாட்டரி சீட்டை பற்றியே மறந்துவிட்டேன். சஜித்துக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றார். லாட்டரி வாங்க பணமும் கொடுக்கவில்லை.. டிக்கெட்டை பற்றி கேக்கவும் இல்லை.. எனவே எளிதாக அந்த டிக்கெட்டை மறைத்து மொத்த பரிசுத்தொகையையும் தானே சுருட்டியிருக்க முடியும். ஆனாலும் நேர்மையாக செயல்பட்டு வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு 30 லட்சம் பரிசுத்தொகை வாங்க உதவிய லாட்டரி வியாபாரியான சஜித்தின் செயலை கேரள மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
கேரள லாட்டரி டிக்கெட்
கடந்த வாரமே இந்த நிகழ்வு நடைபெற்ற போதிலும் கேரள நெட்டிசன்கள் இடையேயும் லாட்டரி பிரியர்கள் மத்தியிலும் தற்போது நெகிழ்ச்சியாக இந்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது. கேரளாவில் நாள் தோறும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடைபெறுகிறது. வாரத்தின் 7 நாட்களும் ரூ.1 கோடி முதல் பரிசுத்தொகை கொண்ட டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடைபெற்று வருகிறது. அதுபோக ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரிகளின் குலுக்கலும் நடைபெறுகின்றன. தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ10 கோடியாகும்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications