Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு கோடியா? ஓணம் பண்டிகையால் கேரளாவில் அதிகரித்த மது விற்பனை! வாய்பிளக்க வைத்த சேட்டன்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மதுபான விற்பனை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவுக்கு மதுபானம் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது கேரளா கிட்ட நெருங்க முடியாத நிலையில் உள்ளது.

மதுபானம் குடிப்பது என்பது உடல்நலத்துக்கு தீங்கானது. இருப்பினும் பலரும் மதுபானத்தை குடித்து வருகின்றனர். குறிப்பாக திருவிழா, பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை என்பது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது.

Kerala makes Rs.759 crore from Liquor sales in onam Festivel

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தீபாவளி உள்பட முக்கிய பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை என்பது பல மடங்கு வரை அதிகரிக்கும். அந்த வகையில் தான் தற்போது கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி மதுபானம் விற்பனை என்பது உச்சம் தொட்டுள்ளது.

கடந்த மாதம் 20ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியது. இன்றுடன் ஓணம் பண்டிகை முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவில் மொத்தம் ரூ.759 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மதிப்பு என்பது ரூ.600 கோடி என கூறப்படும் நிலையில் வெறும் 11 நாளில் அதனை விட ரூ.159 கோடி அதிகமாக கேரளாவில் ஓணம் பண்டிகைக்கான மதுவிற்பனை நடந்துள்ளது.

இதுதொடர்பாக கேரளா மாநில மதுபான கார்ப்பரேஷன் (பெவ்கோ) சார்பில் மாநிலத்தில் மதுபான விற்பனை 10 நாட்களில் உச்சம் தொட்டுள்ளது. ஓணத்துக்காக புதன், வியாழக்கிழமைகளில் மதுபான கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை மதுவிற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மதுபான விற்பனை என்பது 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஓணத்தையொட்டி உத்ராடம் தினத்தில் மட்டும் பெவ்கோவுக்கு மதுபான விற்பனை மூலம் ரூ.116 கோடி வருவாய் கிடைத்துள்ளது'' என தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த மதுபான விற்பனையில் கிடைத்த வரி வருவாய் என்பது அந்த மாநிலத்துக்கு உதவும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுபான வகைகளை பொறுத்தமட்டில் கேரளா மாநில தயாரிப்பான ஜவான் ரம் வகை அதிகமாக விற்பனையாகி உள்ளது. கடந்த 10 நாளில் மட்டும் 70 ஆயிரம் கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் ஏரியா வாரியாக பார்த்தால் மலப்புரம் திரூரில் உள்ள மதுவிற்பனை நிலையம் முதலிடத்தையும், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாலக்குடா 2வது இடத்தை பிடித்துள்ளது.

இருப்பினும் கூட தமிழ்நாட்டை ஒப்பிடும்போது கேரளாவில் மதுபான விற்பனை என்பது குறைவு தான் என சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும் எனவும், கேரளாவில் 10 நாளில் தான் இந்த விற்பனை நடந்துள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+