திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிம்கார்டு வாங்க சென்ற நடிகை.. ஷட்டரை இழுத்துவிட்டு சிறை வைத்த ஊழியர்கள்.. கேரளாவில் ஒரே பரபரப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் சிம்கார்டு வாங்க சென்ற பிரபல நடிகை அன்னா ராஜனை தனியார் நிறுவனத்தினர் ஷட்டரை பூட்டி சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மலையாள சினிமாவில் நடிகைகளில் ஒருவர் அன்னா ராஜன். இவர் ‛அங்கமாலி டைரீஸ்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பிறகு மதுர ராஜா, ‛அய்யப்பனும் கோஷியும்' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.

சுற்றுலா துயரம்: கோவையில் இருந்து சென்ற கேரளா அரசு பேருந்து மீது பள்ளி பேருந்து மோதி 9 பேர் பலி! சுற்றுலா துயரம்: கோவையில் இருந்து சென்ற கேரளா அரசு பேருந்து மீது பள்ளி பேருந்து மோதி 9 பேர் பலி!

சிம்கார்டு வாங்க சென்ற நடிகை

சிம்கார்டு வாங்க சென்ற நடிகை

இந்நிலையில் தான் நேற்று நடிகை அன்னா ராஜன் டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க கொச்சியில் உள்ள ஆலுவா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சென்றார். அப்போது அன்னா ராஜனுக்கும், அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறை வைப்பு

சிறை வைப்பு

இதையடுத்து பெண் ஊழியரும், அன்னா ராஜனும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சில ஊழியர்கள் நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி நடிகை அன்னா ராஜனை சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அன்னா ராஜன் தனது தந்தை மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து சம்பவம் குறித்து தெரிவித்தார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

தனியார் நிறுவனத்துக்கு அவர்கள் வந்த நிலையில் அன்னா ராஜன் விடுவிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு நடந்த வாக்குவாதம், தள்ளுமுள்ளு சம்பவத்தி்ல அன்னா ராஜன் காயமடைந்தார். இதுபற்றி நடிகை அன்னா ராஜன் ஆலுவா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் 2 தரப்பையும் அழைத்து விசாரித்தனர்.

நடிகை விளக்கம்

நடிகை விளக்கம்

இந்த வேளையில் பெண் ஊழியர், அன்னா ராஜனிடம் மன்னிப்பு கோரினார். இதையடுத்து அவர் தனது புகாரை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதுபற்றி அன்னா ராஜன் கூறுகையில், ‛‛நான் டூப்ளிகேட் சிம் வாங்குவதற்காக செல்போன் நிறுவனத்திற்கு சென்றேன். அப்போது நடிகை என்பதை அவர்களிடம் கூறவில்லை. இந்த வேளையில் பெண் ஊழியர் என்னிடம் தகராறு செய்தார். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஊழியர்கள் ஷட்டரை பூட்டி சிறை வைத்தனர். புகார் அளித்த நிலையில் தவறுக்கு மன்னிப்பு கோரினர். இதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்'' என்றார்.

English summary
Famous actress Anna Rajan, who went to buy a SIM card in Kerala, was locked up by a private company and imprisoned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X