ஐயா.. என் கிணத்துல இருந்த தண்ணிய காணோம்! வடிவேலுபோல் புகாரளித்த நபர் - மிரண்ட அதிகாரிகள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கிணற்றில் இருந்த தண்ணீரை காணவில்லை என அதிகாரிகளிடம் ஒரு நபர் புகாரளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கேரளா மாநிலம் திருச்சூரை அடுத்த வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷன்.
இவர் தனது வீட்டு தோட்டத்தின் அருகே கிணறு ஒன்றை தோண்டி அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரில் தனது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்

சதீஷனின் கிணறு
கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமாகவும், மழை நீர் மூலமாகவும் கிணத்தில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை சதீஷன் கிணற்றில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் உதவியுடன் அளவு கருவி மூலம் அளந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக சதீஷன் கிணற்றில் இருந்த தண்ணீர் அளவை பார்த்துள்ளார்.

தண்ணீர் மாயம்
அப்போது கிணற்றில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்திருக்கிறது. மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தததை அவர் கவனித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் காலை அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரும் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சதீஷன், அதற்கான காரணத்தை அறிய கிணற்றை சுற்றிலும் பார்த்து இருக்கிறார்.

அதிகாரிகளிடம் புகார்
கிணற்றின் அடிப்பகுதியில் உடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்குமா? என்றும் அவர் கவனித்து உள்ளார். தண்ணீர் குறைந்ததற்கான தடயமே தெரியவில்லை. தனது கிணற்றில் மாயமான தண்ணீர், அருகில் உள்ள கிணறுகளில் தேங்கி இருக்குமா என்ற சந்தேகத்தில் அண்டை வீடுகளில் இருந்த கிணறுகளையும் அவர் பார்த்துள்ளார். எதற்கும் விடை கிடைக்காததால் விரக்தியடைந்த சதீஷன் இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு
இதனை தொடர்ந்து அதிகாரிகள் சதீஷன் வீட்டுக்கு சென்று கிணற்றை பார்வையிட்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் 18 அடி தண்ணீரும் மாயமாக வாய்ப்பு இல்லை எனக்கூறிய அதிகாரிகள், இது எப்படி நடந்தது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு நடத்திய பிறகே இதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications