பல் துலக்காமல் முத்தம்! கடுப்பாகி சத்தம் போட்ட மனைவி.. ஆத்திரத்தில் குத்தி கொன்ற கணவர்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சிறு சண்டை காரணமாகக் கணவர் மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஒரு குடும்பத்தில் கணவர் மற்றும் மனைவிக்கு இடையே சண்டை வருவது இயல்பான ஒன்று தான். பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் இதுபோன்ற சண்டைகளைத் தீர்த்து வைப்பார்கள்.
இப்போதெல்லாம் கிட்டதட்ட அனைவரும் தனிக் குடும்பமாகவே இருப்பதால், வீட்டில் ஏற்படும் சிறு சண்டைகளும் பூதாகரம் ஆகிவிடுகிறது.

பரபர சம்பவம்
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடந்துள்ளது. கணவர் மற்றும் மனைவிக்கு இடையே சிறு தொடங்கிய சிறு பிரச்சினை பெரிய விஷயமாக மாறவே, கணவரே மனைவியைக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவினாஷ். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இரு மாதங்களுக்கு முன்பு தான், அவர் பாலக்காடு திரும்பி உள்ளார். இவருக்கும் தீபிகா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குக் கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

முத்தம்
குழந்தை உடன் அந்தத் தம்பதி பாலக்காட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் தனது செல்ல மகனைக் கொஞ்சுவதை அவினாஷ் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார். அதுபோலத் தான் சில நாட்களுக்கு முன்பு காலை வழக்கம் போல தனது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மகனுக்கு முத்தமும் கொடுத்துள்ளார்.

கொலை
இதனால் கோபமடைந்த மனைவி தீபிகா, காலை எழுந்ததும் பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இந்த சிறு சண்டை இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவினாஷ், சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து அவரது மனைவியை ஆவேசமாகக் குத்தி உள்ளார். இதில் அவர் அலறி துடித்தார்.

கைது
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவினாஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தீபிகா ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவினாசை கைது செய்தனர்.

சிறு விவகாரம்
பல் துலக்காமல் முத்தம் கொடுத்தது தொடர்பாகச் சிறு சண்டை கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், பொதுமக்களிடையே மன ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications