"என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்" பேஸ்புக் லைவில் அறிவித்த கணவர்! ஷாக் சம்பவம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில் அவரது கணவர் அறிவித்திருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து காவல் நிலையத்திலும் அவர் சரணடைந்துவிட்டார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரைச் சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஷாலினி (39). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

ஷாலினியின் நடத்தையில் ஐசக் மீது சந்தேகம் இருந்ததாம். மேலும் ஷாலினி தனக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்து பணத்தை யாரிடமோ கொடுத்துவிட்டார் என குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி, ஐசக்கின் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தாராம். இந்த நிலையில் ஐசக் இன்று ஷாலினியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஐசக்கை பார்த்ததும் ஷாலினி இங்கே ஏன் வந்தீர்கள் என கோபத்துடன் கேட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது சமையல் அறைக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த ஷாலினியை, ஐசக் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். ஐசக்கின் கத்திக் குத்தால் ஷாலினி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஷாலினியின் வீட்டிலிருந்து தப்பியோடிய ஐசக், தனது செல்போனில் பேஸ்புக் லைவ் வீடியோ போட்டுள்ளார். அதில் தான் மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். மேலும் புனலூரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்ற அவர், தனது மனைவியை கொலை செய்த விஷயத்தை கூறி சரணடைந்தார்.
இதையடுத்து ஐசக்கை அழைத்துக் கொண்டு ஷாலினியின் வீட்டிற்கு சென்று போலீஸார் பார்த்த போது அவர் இறந்து கிடந்தாராம். உடனே அவரின் உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏன் கொலை செய்தார் என்பது குறித்தும் ஐசக்கிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதே போல் உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்தர் நகர் மாவட்டத்தில் 28 வயது மனைவி சஞ்சல் ஷர்மா. இவர் பீட்சா கடையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அந்த கடையில் பணியாற்றிய நபருடன் அவருக்கு தொடர்பிருப்பதாக அவரது கணவர் சோனு ஷர்ம தவறாக நினைத்துக் கொண்டு தனது மனைவியை குத்தி கொலை செய்துவிட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications