வாவ்.. மகளுக்கு கல்யாணம் பண்ண காசில்ல! வீட்டை விற்க போனவருக்கு.. கேரள லாட்டரியில் அடித்த ரூ.1 கோடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கடும் பணக்கஷ்டத்தில் இருந்தவருக்கு 1 கோடி ரூபாய் லாட்டரி அடித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கேரளா மாநிலம் காசர்கோடு அருகே மாஜேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் முகமது பாவா. 50 வயதாகும் இவருக்கு ஆமினா என்ற மனைவியும், 4 பெண்கள் உட்பட 5 குழந்தைகளும் உள்ளனர்.
இதில் முதல் 2 பெண்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது.

திருமணம்
இந்த நிலையில் 3வது பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை முகமது பாவா கடந்த சில நாட்களாக செய்து வந்தார். ஆனால் இவரிடம் மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்ய போதிய பணம் இல்லை. இவரின் மகன் வெளிநாட்டில் சேல்ஸ்மேன் பணியில் இருக்கிறார். அவர் அனுப்பிய காசில் சமீபத்தில் பாவா 2000 சதுர அடியில் வீடு ஒன்றை கட்டி இருந்தார். இந்த வீட்டை தவிர அவர்களிடம் சொத்து பெரிதாக இல்லை.

எவ்வளவு
இதையடுத்து 2வது மகளுக்கு திருமணம் செய்வதற்காக அந்த வீட்டை விற்க பாவா முடிவு செய்துள்ளார். இதற்காக பல டீலர்களை அணுகி கடைசியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை வாங்க ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். டோக்கன் பணத்தோடு வந்து அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கையெழுத்து போடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்திலேயே அவருக்கு 30 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது.

கடன்
ஏற்கனவே இருந்த கடன், 3வது மகளின் திருமணம் அனைத்தையும் சேர்த்து 45 லட்சம் ரூபாய் அவருக்கு தேவை பட்டுள்ளது. வீடு வாங்க அந்த நபரும் 40 லட்சம் ரூபாய்க்கு வீட்டை வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டு அதற்காக டோக்கன் பணம் கொடுக்க வந்துள்ளார். ஆனால் 5 மணிக்கு அந்த நபர் வருவதற்குள் 3 மணிக்கு பாவாவிற்கு 1 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்துள்ளது.

Fifty-Fifty லாட்டரி
இவர் அன்று காலை வாங்கிய Fifty-Fifty லாட்டரியில் இந்த பணம் விழுந்துள்ளது. இது அரசு மூலம் நடத்தப்படும் லாட்டரி ஆகும். இதை கடந்த நான்கு மாதங்களாக இவர் வாங்கி வந்துள்ளார். தினமும் ஏதாவது பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் லாட்டரி வாங்கி உள்ளார். இந்த நிலையில் சரியாக வீட்டை விற்கும் நாளில் இவருக்கு 1 கோடி ரூபாய லாட்டரியில் விழுந்துள்ளது.

பாவா
இதையடுத்து வீட்டை விற்கும் முடிவை அவர் கைவிட்டுள்ளார். வீட்டை வாங்க வந்த நபரிடம் நன்றி சொல்லி.. வீடு விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ளார். லாட்டரியில் ஒரு கோடி விழுந்தாலும் அவருக்கு வரி உள்ளிட்ட பிடித்தம் போக 63 லட்சம் ரூபாய் கையில் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவரு கூறுகையில் என் கஷ்டம் எல்லாம் போய் விட்டது. என் மகளுக்கு இனி எளிதாக திருமணம் செய்வேன். என் வீட்டையும் காப்பாற்றிவிட்டேன் என்று பாவா குறிப்பிட்டுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications