அடேங்கப்பா! ரூ.10 கோடியை அள்ள போகும் அதிர்ஷ்டசாலி யார்? கேரளாவில் வந்தாச்சு அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட்
திருவனந்தபுரம்: கேரளாவில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்து முடிந்த நிலையில் தற்போது ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட மான்சூன் பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒரு லாட்டரியின் விலை ரூ.250 ஆகும். மொத்தம் 5 சீரிஸ்களில் இந்த டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 2-வது பரிசாக ரூ.10 லட்சம் ஆறு டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. 3-வது பரிசாக ரூ.5 லட்சம் அளிக்கப்படுகிறது.
கேரளாவில் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.12 கோடி VD 204266 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. கோழிக்கோடு நகரில் வாங்கப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்து இருப்பது தெரியவந்தது. பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

கேரள லாட்டரி டிக்கெட்டுகள்
கேரள லாட்டரிகளை பொறுத்தவரை அங்கு வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகள் குலுக்கல் நடைபெறும். கிறிஸ்துமஸ் நியூ இயர், விஷூ பம்பர், மான்சூன் பம்பர், திருவோணம் பம்பர், பூஜா பம்பர் என வருடத்திற்கு ஆறு பம்பர் குலுக்கல் நடைபெறுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி முதல் பரிசுத்தொகையாகும்.
மான்சூன் பம்பர் லாட்டரி
பல கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க கேரள லாட்டரி பிரியர்கள் பெரும் ஆர்வம் காட்டுவார்கள். வெளி மாநிலத்தவர்கள் கேரளாவிற்கு வரும் போது வாங்கிய டிக்கெட்டிற்கு பரிசு விழுந்தால் அவர்களுக்கும் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. இதனால் கேரளாவில் பணியாற்றும் வெளி மாநில புலம் பெயர் தொழிலாளர்கள், சுற்றுலா செல்பவர்கள் என பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனால், பல லட்சம் லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு கேரள அரசு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. விஷு பம்பர் லட்டரி டிக்கெட்டுகள் 40 லட்சத்திற்கும் மேல் அச்சடிக்கப்பட்டு கிட்டத்தட்ட அனைத்தும் விற்று தீர்ந்தன. தற்போது விஷு பம்பர் லாட்டரியை தொடர்ந்து மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
ரூ.10 கோடி முதல் பரிசு
இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது. மொத்தம் ஐந்து சீரிஸ்களில் இந்த டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் ஆறு டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் அளிக்கப்படுகிறது.
4-வது பரிசாக ரூ.3 லட்சம் அளிக்கப்படுகிறது. இதுபோக ரூ.5 ஆயிரம், ஆயிரம், ரூ.500, ரூ.250 ஆகிய தொகைகளிலும் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் ஜூலை 27 ஆம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். முதல் பரிசாக ரூ.10 கோடி கிடைக்கும் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.
காருண்யா லாட்டரி முதல் பரிசு
எனவே, இந்த பம்பர் லாட்டரி டிக்ககெட் விற்பனையிலும் பாலக்காடு மாவட்டமே முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்த இடத்தில் தலைநகர் திருவனந்தபுரம் பிடிக்கும் என்று தெரிகிறது. இன்று நடைபெற்ற காருண்யா லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி KB 514655 என்ற எண்ணிற்கு அடித்துள்ளது.
இந்த டிக்கெட் புனலூரில் வாங்கப்பட்டது ஆகும். இரண்டாவது பரிசாக ரூ. 50 லட்சம் KC 729447- என்ற எண்ணிற்கு அடித்துள்ளது. லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும்.












Click it and Unblock the Notifications