பிஎம்ஸ்ரீ பெயரை சொல்லி.. கல்வி நிதியில் கை வைத்த மத்திய அரசு! வழக்குத் தொடர கேரளா திட்டம்
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டை போலவே கேரளாவுக்கும் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர அம்மாநில அரசு முடிவு எடுத்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியிருக்கிறார்.

நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, சிவன் குட்டி சந்தித்திருந்தார். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக மாநில அரசின் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.1500 கோடி நிறுத்தி வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதால் 7000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை, இலவச சீருடை, பாட புத்தகங்கள், நூலக உதவி தொகை, விளையாட்டு பொருட்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை விடுவிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
பி.எம்.ஸ்ரீ திட்டம், 2009 கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், தமிழ்நாடும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கைகளை கொண்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை கேரளாவில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 14,500 பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். அதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
காரணம் புதிய கல்விக்கொள்கையில் பல சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருக்கின்றன என்று இரு மாநில அரசுகளும் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டுவரப்படும் என புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. அதாவது 35 மார்க் எடுத்தால் தேர்ச்சி என்கிற நிலை இருக்கிறது எனில், தற்போது வரை மாநில அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்கிற விதி பின்பற்றப்பட்டு வருகிறது.
இதுவே புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டால், 3ம் வகுப்பில் மாணவர்கள் 35 மார்க்குக்கு குறைவாக எடுத்தால் அவர்களால் அடுத்த வகுப்புக்கு போக முடியாது.
மற்றொரு சிக்கல் மும்மொழிக்கொள்கை. புதிய கல்விக்கொள்கை மும்மொழிக்கொள்கையை வலியுறுத்துகிறது. அதாவது ஒரு சர்வதேச மொழியையும், 2 தேசிய மொழிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும் . அப்படி பார்த்தால் ஆங்கிலம் சர்வதேச மொழி. மீதமுள்ள இரண்டு ஆப்ஷன்களில் ஒன்று மாநில மொழியாக இருக்கும். தமிழ்நாடு எனில் தமிழ் என்றும், கேரளாவில் மலையாளம் இருக்கும். இன்னொரு தேசிய மொழி எனில் அங்கு ஆட்டோமேட்டிக்காக இந்தி வந்துவிடுகிறது.
இந்தியை தவிர மற்ற மொழிகளை கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை என மகாராஷ்டிரா மாநிலம் சமீபத்தில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அம்மாநிலத்தில் பாஜக கூட்டணிதான் ஆளும் கட்சியாக இருக்கிறது. இப்படியான சிக்கலால்தான் தமிழ்நாடு, கேரள அரசுகள் இந்த பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
-
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications