திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியர்களை கைவிடும் கொடூர செயல்.. மத்திய அரசின் சுற்றிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கேரளா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இத்தாலி உள்ளிட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கொரோனா பாதிப்புடன் இல்லை என்று அந்நாட்டு மருத்துவதுறையில் சான்றிதழ் வாங்கிவந்தால் தான் இந்தியாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற மத்திய அரசின் சுற்றக்கைக்கு எதிராக கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Recommended Video

    Corona Virus : இந்தியாவில் முதல் உயிரிழப்பு ?

    உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4716 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்றுடன் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     Kerala passed resolution against the Centres circular barring the return of Indians from coronavirus-hit countries

    வெளிநாட்டில் இருந்து வந்த இந்தியர்களால் தான் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து சீனா, இத்தாலி உள்ளிட்ட கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை என்று அந்நாடடு மருத்து துறையில் சோதனை செய்து வழங்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காண்பித்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனறு மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    இந்த சுற்றறிக்கையால் இந்தியர்கள் இந்தியாவிற்குள் வருவதில் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு எதிராக கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அம்மாநில அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த சுற்றறிக்கை மனிதாபிமானமற்றது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை கொடூரமாக கைவிடுவதற்கு ஒப்பானது என்று காட்டமாக தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் நாட்டிலேயே கேரளாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குதான் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கேரளாவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

    English summary
    The Kerala Assembly on Thursday passed a unanimous resolution against the Centre's circular barring the return of Indians from coronavirus-hit countries
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X