கையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி
6 கொலைகளையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டுள்ளார் ஜோலி
Recommended Video
திருவனந்தபுரம்: ஜோலி பயங்கர கிரிமினல் கில்லாடியாக இருந்திருக்கார் பாருங்க. விஷத்தை எப்படி கலப்பது என்பதில் கூட அவர் மிக மிக கவனமாக, நுணுக்கமாக செயல்பட்டுள்ளார். இது போலீஸாரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சயனைடு விஷத்தை உணவில் கலந்துதான் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அவர் காலி செய்துள்ளார். அதை அவர் செய்த விதம், போட்ட ஸ்கெட்ச் எல்லாமே பயங்கரமாக இருக்கிறது.
விஷத்தை கையில் எடுத்து உணவில் கலப்பதற்கு முன்பு கையில் சிறு கீறல் கூட இல்லாமல் கவனமாக இருந்துள்ளார் ஜோலி. காரணம், காயத்தின் வழியாக அவரது உடலுக்குள் விஷம் ஏறி விடக் கூடாது என்பதற்காகவாம்.

திட்டம்
ஒவ்வொரு கொலையையும் மிக மிக தெளிவாக திட்டமிட்டு செய்துள்ளார் ஜோலி. உணவில் விஷம் கலப்பதற்கு முன்பு தனது கையில் எந்த சிறு கீறலும் இல்லாமல் கவனமாக இரு்திருக்கிறார். கொஞ்சம் போல சயனடை அள்ளி உணவில் கலந்து மிக்ஸ் செய்துள்ளார்.

சேர்ந்து மது
தனது மாமியாரின் சகோதரர் மாத்யூ மஞ்சடியில் என்பவரைக் கொல்ல மதுவை பயன்படுத்தியுள்ளார். மதுவில் சயனைடை கலந்து கொடுத்து அவரை காலி செய்தார். சாகடிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு இருவருமாக சேர்ந்து மது குடித்துள்ளனராம்.

அதிர வைத்த ஜோலி
அதேபோல தனது 2வது கணவர் சாஜுவின் மனைவி சிலிக்கு மருந்தில் சயனைடு கலந்து கொடுத்து காலி செய்துள்ளார். இதற்கு சாஜுவும் உதவி செய்ததாக ஜோலி கூறியிருப்பது போலீஸாரை அதிர வைத்துள்ளது. தற்போது ஜோலிக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் திரட்டும் வேலையில் போலீஸார் இறங்கியுள்ளனர். ஆதாரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே ஜோலியை தண்டனைக்குள்ளாக்க முடியும் என்பதால் ஆதாரத்தை திரட்டும் வேலை தீவிரமாகியுள்ளது.

குற்றப்பத்திரிகை
6 இடங்களில் போலீஸார் ஆதாரத்தை திரட்டி வருகின்றனராம். எங்கெல்லாம் கொலை நடந்ததோ அங்கெல்லாம் ஜோலியைக் கூட்டிக் கொண்டு போய் போலீஸார் ஆதாரத்தை திரட்டி வருகின்றனர். அனைத்தும் கிடைத்த பின்னர் ஜோலிக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications