திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலையில் போராட்டம் நடத்திய 1400 பேர் அதிரடி கைது!

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.

ஆனால் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள்.

[நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டார்.. டிஎஸ்பி மீது பெண் எஸ்ஐ பரபர புகார்]

போராட்டம் செய்தனர்

போராட்டம் செய்தனர்

இந்த போராட்டம் காரணமாக சில பெண்கள் தாக்கப்பட்டனர். போலீசார் கூட தாக்கப்பட்டனர். பல வாகனங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தனர். இது கேரளாவில் 5 நாட்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மீட்டிங் நடத்தினார்

மீட்டிங் நடத்தினார்

ஆனால் இத்தனை கலவரமும் நடந்த போது கேரளா முதல்வர் பினராயி அதில் பெரிய அளவில் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இதையடுத்து நேற்று மாலை கேரளா முதல்வர் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். போலீசார், ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார்.

கைது செய்தார்

கைது செய்தார்

இந்த நிலையில் தற்போது சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 1400 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டு இருக்கிறது. பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து நிறைய பேர் கைதாகி உள்ளனர்.

வழக்கு உள்ளது

வழக்கு உள்ளது

கைதானதில் 90 சதவிகிதம் பேர் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள். அதேபோல் 2000 பேர் மீது 256 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இவர்கள், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கைதுகள் அம்மாநிலத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Kerala police has arrested 1400 Sabarimala protesters on a single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X