போலீஸ் வேலைக்கே உலை வைத்த "மாம்பழம்".. அடித்து தூக்கிய கேரள அரசு.. இப்படி ஆயிருச்சே "ஆபிசர்"
மாம்பழ வாசனை மூக்கை துளைக்கவே ஆசையை கட்டுப்படுத்த முடியாத சப் இன்ஸ்பெக்டர் ஷிகாப், சாலோயோர வியாபாரிகள் வைத்து சென்ற மாம்பழங்களை திருடியிருக்கிறார்.
திருவனந்தபுரம்: ஒரு சாதாரண மாம்பழ ஆசை, கேரளாவை சேர்ந்த போலீஸ் எஸ்ஐ ஒருவரின் வேலைக்கே உலை வைத்துள்ளது.
மாம்பழங்களை திருடி மாட்டிக் கொண்ட அந்த சப் இன்ஸ்பெக்டரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி அதிரடி காட்டியிருக்கிறது கேரள அரசு.
கேரள அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ள மக்கள், கேரளாவை போலவே மற்ற மாநில அரசுகளும் தவறு செய்யும் போலீஸார் மீது இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வாசனையால் ஏற்பட்ட சபலம்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிகாப் (38). இவர் இடுக்கி மாவட்ட ஆயுதப்படையில் இவர் சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கோட்டயம் அரசு மருத்துவமனையில் இரவுப் பணி முடித்துவிட்டு, அதிகாலை 4 மணிக்கு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அடக்க முடியாத ஆசை
பரதோடு என்ற இடத்தை கடக்கும்போது, அங்கு திடீரென வந்த மாம்பழ வாசனை அவர் மூக்கை துளைத்திருக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஷிகாப் சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள நடைபாதையில் வியாபாரிகள் சிலர் கூடை கூடையாக மாம்பழங்களை வைத்திருந்தது தெரியவந்தது. மாம்பழ வாசனையால் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தவித்த எஸ்.ஐ. ஷிகாப், மாம்பழங்களை திருடுவதென முடிவு செய்தார்.

10 கிலோ மாம்பழங்கள்..
அதன்படி, நைஸாக மோட்டார் சைக்கிளை மாம்பழக் கூடைகளுக்கு அருகே கொண்டு வந்த அவர், விறுவிறுவென அங்கிருந்த மாம்பழங்களை திருடி பைக்கின் சீட்டுக்கு அடியில் போட்டார். இவ்வாறு சுமார் 10 கிலோ மாம்பழங்களை திருடிய அவர், 'அப்பாடா..' என நிறைந்த மனதுடன் வீடு திரும்பினார். இந்நிலையில், காலையில் வந்து பார்த்த வியாபாரிகள், மாம்பழங்கள் திருடுபோனது குறித்து போலீஸுக்கு புகார் அளித்தனர். இதன்பேரில் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீஸ் எஸ்.ஐ. ஷிகாப் தான் மாம்பழங்களை திருடியது தெரியவந்தது.

வீட்டுக்கு அனுப்பிய கேரள அரசு
மேலும், இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களிலும் தீயாகப் பரவியது. இதன் தொடர்ச்சியாக, மாம்பழங்களை திருடிய குற்றத்துக்காக எஸ்.ஐ. ஷிகாப்பை இடுக்கி எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, சம்பந்தப்பட்ட வியாபாரி தனது புகாரை வாபஸ் பெற்றதால் அண்மையில் பணியில் சேர்ந்தார் ஷிகாப். இந்த சூழலில், குற்ற வழக்குகளில் சிக்கிய போலீஸாரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் கேரள அரசு கடந்த சில வாரங்களா ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், மாம்பழம் திருடி காவல்துறைக்கே அவமானம் ஏற்படுத்திய எஸ்.ஐ. ஷிகாத்தை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications