திருவனந்தபுரத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாற்றம்.. பாஜகவின் புதிய மேயர் யார்? வெளியான அப்டேட்
திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. இடதுசாரிகளின் வசமாக இருந்த இந்த மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தற்போது கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், பாஜகவின் புதிய மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், யூகங்களின் அடிப்படையில் சில பெயர்கள் அடிப்பட்டிருக்கின்றன.
மொத்தமுள்ள 101 வார்டுகளில் பாஜக 50 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது. எனவே பாஜக சார்பில் போட்டியிட்ட 50 கவுன்சிலர்களில் யாரேனும் ஒருவர்தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது.
.

வளர்ச்சியை முன்னிறுத்திதான் பாஜக இந்த தேர்தலில் வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே வளர்ச்சியை கட்சி கொடுக்கும் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நபரைத்தான் கட்சி மேயராக தேர்ந்தெடுக்கும். அப்படியாக மூன்று பெயர்களை கட்சி பட்டியலிட்டிருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருப்பவர் ஆர்.ஸ்ரீலேகா.
இவர் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் பாஜகவில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, சாஸ்தமங்கலம் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்று இருக்கிறார். இவ்வளவு பெரிய நபர், சாதாரண வார்டு கவுன்சிலராக தேர்தலில் பாஜக களம் இறக்கி இருந்தபோதே, இவர் மேயர் வேட்பாளருக்காகதான் களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்று பரவலாக பேச்சுக்கள் இருந்தன.
வயதில் மூத்தவராகவும், உயர்மட்ட அரசு நிர்வாக அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால், மாநகராட்சி நிர்வாகத்தை வழிநடத்த இவர் சரியான தேர்வாக இருக்கலாம் என்று கட்சி கருதுகிறது.
அதேபோல இவரை தவிர, மற்ற இரண்டு பெயர்களையும் கட்சி தனது பட்டியலில் வைத்திருக்கிறது. வி. வி. ராஜேஷ் அல்லது எம்.ஆர். கோபன் ஆகியோர் மேயராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த கவுன்சிலர் தேர்தல் வெற்றி பெற்று, இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பை வகிக்க, அனுபவம் வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பது கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பேரும் அனுபவசாலிகள் என்பதால் இவர்களது பெயர் பட்டியலில் இருக்கிறது.
மாநகராட்சி நிர்வாகம், நிதி ஒதுக்கீடு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை மிகவும் சிக்கலானவை. எனவே, பல ஆண்டுகளாக கவுன்சிலராக இருந்த மூத்த தலைவர்கள், இந்த செயல்முறைகள், மாநகராட்சியின் வரவு செலவு திட்டங்கள் மற்றும் அரசு அதிகார வர்க்கம் ஆகியவற்றுக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். எனவேதான் . வி. ராஜேஷ் மற்றும் எம்.ஆர். கோபன் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.
ஆர்.ஸ்ரீலேகா போன்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு நிர்வாக அமைப்பை புரிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்படும். இது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு காரணமாக அமையலாம். எனவே, முதலில் மூத்த கவுன்சிலரை மேயராக்குவது, அடுத்த தேர்தல்களில் தாங்கள் நியமிக்க விரும்பும் ஒருவரை மேயராக நியமிப்பது என்ற முடிவுக்குள் கட்சி செல்லவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மட்டுமல்லாது வி. ராஜேஷ் அல்லது எம்.ஆர். கோபன் இருவரும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். கட்சி விசுவாசிகளின் நம்பிக்கையை பெறுவதற்காக இவர்களை மேயராக்க கட்சி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பாஜகவை எதிர்காலத்தில், கேரளத்தில் பலமாக வளர்க்க பயன்படும். அதேபோல இவர்கள் இருவரும், உள்ளாட்சி அமைப்புகளில் அனுபவம் கொண்டவர்கள் என்பதால் இவர்களை மேயராக நியமிப்பதன் மூலம் மேயருக்கான போட்டியை எளிதில் முடித்து வைக்க முடியும் என்றும் கட்சி நம்புகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications