மனைவி விற்ற லாட்டரிக்கு ரூ.12 கோடி.. கணவருக்கு 2-வது பரிசு.. கேரள பூஜா பம்பரில் அடித்த யோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரியின் குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.12 கோடி JC 253199 என்ற லாட்டரி சீட்டுக்கு கிடைத்தது. கணவன் - மனைவி ஆகிய இருவரும் தனித்தனியே விற்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசும் இரண்டாவது பரிசும் கிடைத்துள்ளது. இந்த அதிர்ஷ்டம் எப்படி அடித்தது என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. எனினும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் அங்கு லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படும். இதுபோக, கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், பருவமழைக்கால பம்பர், ஓணம் மெகா பம்பர், பூஜா பம்பர் என பம்பர் பரிசுத்தொகை கொண்ட லாட்டரியும் விற்கப்படுகிறது.

ஓணம் பம்பரில் ரூ.25 கோடி பரிசுத்தொகையில் தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு பரிசு அடித்தது. அதன்பிறகு ரூ. 12 கோடி பரிசுத்தொகை கொண்ட பூஜா பம்பர் விடப்பட்டது. ஒரு டிக்கெட் விலை ரூ.300 ஆகும். இந்த லாட்டரி விற்பனை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக படு ஜோராக நடைபெற்றது. ஓணம் பம்பர் தமிழர்களுக்கு அடித்ததால், கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் விற்பனை அதிகரித்தது.
பூஜா பம்பர் லாட்டரி: கேரள மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.12 கோடி என்ற முதல் பரிசை JC 253199 என்ற லாட்டரி தட்டிச்சென்றது. காசர்கோட்டில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரிக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்த லாட்டரியை வாங்கியது யார் என்று இன்னும் தெரியவரவில்லை. காசர்கோட்டில் உள்ள எஸ். 1413 என்ற ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது.
மனைவிக்கு முதல் பரிசு: பாரத் லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் மரிய குட்டி ஜோ (வயது 56) மற்றும் ஜோஜோ ஜோஷப் (வயது 57) ஆகிய இருவரும் தனித்தனியாக லாட்டரியை விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் பூஜா பம்பர் லாட்டரியின் முதல் பரிசு மனைவி விற்ற லாட்டரிக்கும் இரண்டாவது பரிசு கணவரான ஜோஜோ ஜோஷப் விற்ற லாட்டரிக்கும் விழுந்துள்ளது. இதனால், அந்த தம்பதியினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லாட்டரி விற்றதன் மூலம் மரிய குட்டிக்கு ரூ.1.2 கோடியும் அவரது கணவருக்கு ரூ.10 லட்சமும் கிடைக்கும். காசர் கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இந்த தம்பதி 25 ஆயிரம் பூஜா லாட்டரியை விற்பனை செய்துள்ளனர். மன்ஜேஸ்வர் பகுதியில் உள்ள மஜீரபல்லா என்ற இடத்தில் சிறிய லாட்டரி கடையை வைத்துள்ளனர். அவரது கணவர் டாடா நானோ காரில் வைத்து லாட்டரியை விற்பனை செய்து வருகிறார்.
7.56 கோடி ரூபாய்: இவர்கள் தனித்தனியே விற்ற லாட்டரிக்குதான் முறையே முதல் மற்றும் 2-வது பரிசு அடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் லாட்டரி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த தம்பதிக்கு விற்பனை செய்து லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை பரிசு அடிப்பது இதுவே முதல் தடவையாம். இதற்கு முன்பாக ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் ரூ.5 ஆயிரம் என சிறிய அளவிலான பரிசே அடித்து இருக்கிறதாம். பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசு தொகை வென்றவருக்கு வரி பிடித்தம் போக ரூ.7.56 கோடி கையில் கிடைக்கும்.
கடந்த ஆண்டு ஓணம் பம்பரில் பரிசு வென்ற கேரள ஆட்டோ ஓட்டுநர் அனுப்பிற்கு ஏற்பட்ட நிலமையை தொடர்ந்து லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. இதனால், பூஜா லாட்டரியிலும் பரிசு வென்றவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்துவது கஷ்டம் தான் என்று லாட்டரியை விற்பனை செய்த ஜோ ஜோ தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications