பூஜா பம்பர் லாட்டரியில் 12 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி இவர்தான்.. வரி மட்டும் இத்தனை கோடி போயிடுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெடுக்கான குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.12 கோடி ரூபாய்க்கான டிக்கெட் எண் பாலக்காட்டில் வாங்கிய நபருக்கு அடித்துள்ளது. தமிழகத்தின் பார்டர் மாவட்டம் என்பதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்து இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் ரூ.12 கோடி பெற்ற அதிர்ஷடசாலி யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது.கேரள மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. தினசரி டிக்கெட் விற்பனை போக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

ஓணம் பம்பர், பூஜா பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர் என 6 பம்பர் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவருக்கு அடித்தது. அதன்பிறகு பூஜா பம்பர் டிக்கெட் விற்பனை கிடைத்தது.
இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. 12 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த பூஜா பம்பர் டிக்கெட்டில் JC 325526 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடிதத்து. கொல்லம் கே எஸ்.ஆர்.டிசி. பேருந்து நிலையம் அருகே விற்பனை செய்யப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்தது. பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறிய கேரள மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். தமிழகத்தின் பார்டர் மாவட்டம் என்பதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்து இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தான் முதல் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கிய நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. கருணாகப்பள்ளி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற அதிர்ஷ்டசாலிக்குத்தான் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இவருக்கு கமிஷன் தொகை மற்றும் வரி பிடித்தம் போக ரூ.6.18 கோடி கைக்கு கிடைக்குமாம்.
லாட்டரியில் பரிசு வென்ற தினேஷ்குமார் கூறுகையில், "நேற்று எனது நண்பரின் திருமணத்திற்கு சென்று இருந்தேன். அப்போதுதான் நான் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது தெரியவந்தது. எனக்கு கிடைத்த பரிசுத்தொகையை வைத்து ஏழைகளுக்கு உதவ இருக்கிறேன். பணத்தை கவனமாக செலவு செய்வேன். எனக்கு ஒரு தோட்டம் மற்றும் சிறிய பிஸ்சினஸ் உள்ளது.
அதைக் கவனித்து வருகிறேன். நான் 10 டிக்கெட்டுகள் மொத்தமாக வாங்கினேன். எனது குடும்பதினருக்கு கொடுத்து இருந்தேன். இதற்கு முன்னால் சிறிய அளவிலான தொகை எனக்கு பரிசாக கிடைத்தது. 2019-ல் ஒரு சில எண்ணில் வெற்றியை தவற விட்டுவிட்டேன்" என்றார்.
பரிசு விழுந்த டிக்கெட் கொல்லத்தில் உள்ள ஜெயக்குமார் லாட்டரி ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசு அடித்த தினேஷ் சப் ஏஜென்டாக டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இதனால், அவருக்கு ஏஜென்டிற்கான கமிஷன் தொகை ரூ. 1 கோடி கிடைக்கும். அடுத்ததாக கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி விற்பனை தொடங்கும்.












Click it and Unblock the Notifications