கேரள பாதிரியார் மான்சிஞர் ஜார்ஜ் ஜேக்கப்பிற்கு கார்டினல் பதவி.. போப் பிரான்சிஸ் பிறப்பித்த உத்தரவு
திருவனந்தபுரம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை மொத்தம் 21 பாதிரியார்கள் கார்டினல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக இப்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பாதிரியார்கள் பதவி உயர்த்தப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்த 51 வயதான மான்சிஞர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் என்பவரும் இப்போது கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
உலகிலேயே அதிக மக்கள் பின்பற்றும் மதமான கிறிஸ்துவ மதத்தில் கத்தோலிக்க பிரிவில் இந்தியர் ஒருவருக்கு மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கேரள பாதிரியார்: இப்போது கேரளாவில் வசித்து வரும் 51 வயதான மான்சிஞர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையான போப் பிரான்சிஸின் சர்வதேச பயணங்களை மான்சிஞர் ஜார்ஜ் தான் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள சங்கனாச்சேரி சீரோ மலபார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது வாடிகனில் உள்ளார்.
பாதிரியார்கள் கார்டினல்களை பதவி உயர்வு தரும் அதிகாரப்பூர்வ விழா வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. போன்டிஃபிகல் எக்லெசியாஸ்டிகல் அகாடமியில் தனது பார்மேஷனை முடித்த மான்சிஞர் ஜார்ஜ் கடந்த 2006ம் ஆண்டில் வாடிக்கனில் சேவையில் இணைந்தார்.
போப் பிரான்சிஸ் பயணங்கள்: அல்ஜீரியா, தென் கொரியா, ஈரான், கோஸ்டாரிகா மற்றும் வெனிசுலாவில் எனப் பல நாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். தற்போது, அவர் வாடிகன் மாநில செயலகத்தில் அதிகாரியாக இருக்கிறார். போப் பிரான்சிஸில் பயணங்களைத் திட்டமிட்டு வருகிறார்.
யார் அவர்: கடந்த 1973ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தவர் மான்சிஞர் ஜார்ஜ்.. இவர் கடந்த 2004 ஜூலை 24ம் தேதி பாதிரியாராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு போன்டிஃபிகல் எக்லெசியாஸ்டிகல் அகாடமியில் டிப்ளமேடிக் சேவைக்கான பயிற்சியில் சேர்ந்தார்.. 2006இல், பயிற்சியை முடித்த பிறகு அவர் அல்ஜீரியாவில் உள்ள அப்போஸ்தலிக் நன்சியேச்சரில் தனது டிப்ளமேடிக் சர்வீஸை தொடங்கினார்.
அதன் பிறகுத் தென் கொரியாவில் (2009-2012) மற்றும் ஈரானில் (2012-2014) பல முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் அவர் கோஸ்டாரிகா (2014-2018) மற்றும் வெனிசுலாவில் (2018-2020) நன்சியேச்சர்களின் ஆலோசகராக பணியாற்றினார். 2020ஆம் ஆண்டில், அவர் புனித சீயின் மாநிலச் செயலகத்தில் சேர்ந்தார். அங்கு தான் அவர் போப் பிரான்சிஸின் சர்வதேச பயணங்களைத் திட்டமிட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications