கோட்சேவுக்கு ஆதரவாக சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு என்ஐடி தலைவராக பதவி உயர்வு
திருவனந்தபுரம்: மகாத்மா காந்தியின் நினைவு நாளில், "இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய கோழிக்கோடு என்ஐடி பேராசிரியர் ஷைஜா, அதே என்ஐடியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த முடிவினை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், போராட்டத்தை அறிவித்துள்ளன.
தேசிய தொழில்நுட்ப நிறுவனமான கோழிக்கோடு என்ஐடியின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் தலைவராக ஷைஜா நியமிக்கப்பட்டுள்ளார். மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து ஷைஜா கடந்த ஆண்டு கூறிய கருத்துக்கள் இப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்தவருக்கு எப்படி என்ஐடி தலைவர் பதவி அளிக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்குள்ள சில ஆசிரியர்கள் அவரது நியமனத்தில் வழக்கமான சீனியாரிட்டி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

கோழிக்கோடு என்ஐடியின் இயந்திர பொறியியல் துறையில் பேராசிரியரான ஷைஜா ஆண்டவன் என்பவர் கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் நினைவு நாளில் வழக்கறிஞர் கிருஷ்ணா ராஜ் எழுதிய பேஸ்புக் பதிவில் பதில் கருத்து தெரிவித்தபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.வழக்கறிஞர் கிருஷ்ணா ராஜ் தனது பதிவில் "இந்து மகாசபை ஆர்வலர் நாதுராம் விநாயக் கோட்சே" "பாரதத்தில் பலரின் ஹீரோ" என்று வர்ணித்திருந்தார்.இந்த கருத்துக்கு கீழ் கருத்து தெரிவித்த ஷைஜா ஆண்டவன், "இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பேஸ்புக்கில் கூறியிருந்தார்.
பின்னர் கடும் சர்ச்சை எழுந்த காரணத்தால், அந்தக் கருத்தை ஷைஜா நீக்கிய போதிலும், ஸ்கிரீன் ஷாட்கள் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் அப்போது பரவி இருந்தது. இதையடுத்து இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், வேண்டுமென்றே பதிவிட்டு தூண்டுதல் செய்ததாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 இன் கீழ் கோழிக்கோடு நகர காவல்துறை ஷைஜா மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் பேராசிரியை ஷைஜாவுக்கு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, என்ஐடி இயக்குநர், "கோட்சே ஆதரவு" கருத்துக்கள் குறித்து ஷைஜாவிடடம் விளக்கம் பெறுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார். இந்த சர்ச்சைகளுக்கு நடுவில், ஏப்ரல் முதல் ஷைஜா கோழிக்கோடு என்ஐடியின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக்கான டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறியுள்ள கட்சிகள், கோழிக்கோடு என்ஐடி முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், "புதிய கல்விக் கொள்கையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மத்தியில் உள்ள சங்க பரிவார் அரசாங்கம் நாட்டின் கல்வித் துறையில் செயல்படுத்தி வரும் வகுப்புவாதத்தின் முக்கிய மையமாக கோழிக்கோடு மாறிவருகிறது என்பதற்கு இது உதாரணம்" என்று கூறியுள்ளது.
முன்னதாக ஷைஜா, தனது பதிவு குறித்து அளித்த விளக்கத்தில், "எனது கருத்து காந்திஜியின் கொலையைப் பாராட்டுவதற்காக அல்ல. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் 'நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' என்ற புத்தகத்தைப் படித்தேன். கோட்சே ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. அவரது புத்தகத்தில் சாமானியருக்குத் தெரியாத பல தகவல்கள் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டியிருக்கிறார் இந்தப் பின்னணியில் தான், வழக்கறிஞரின் பேஸ்புக் பதிவில் நான் கருத்து தெரிவித்திருந்தேன். ஆனால் மக்கள் எனது கருத்தைத் திரித்துக் கூறத் தொடங்கினார்கள் என்பதை உணர்ந்தபோது, அதை நீக்கிவிட்டேன்." என்று பேராசிரியை ஷைஜா அப்போது விளக்கம் அளித்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications