நாளை முதல் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா.. கொரோனாவிலிருந்து 90 சதவீதம் மீண்ட அதிசயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள 7 மாவட்டங்களில் நாளை முதல் உணவகங்கள் திறக்கவும் குறைந்த அளவிலான தனியார் வாகனங்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கேரளாவில் நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.
Recommended Video
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதன்முதலில் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மாவட்ட எல்லைகளையும் மாநில எல்லைகளையும் மாநில அரசு மூடியது.
இதையடுத்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொது போக்குவரத்துகளான ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

கொரோனா
இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. மேலும் அங்கு 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவற்றில் 170-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் 100 முதல் 150 பேரே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் நாட்களில் இவர்களும் குணமடைந்து வீடு திரும்பும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சில தளர்வுகள்
கேரளாவை 4 மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி சிகப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி, பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இந்த 4 மண்டலங்களில் 3 மண்டலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்தது. குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் சில தளர்வுகளை மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உணவகங்கள்
அதன்படி கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அது போல் திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய பகுதிகள் ஆரஞ்சு பி பகுதிகளாக பிரிக்கப்பட்டன. பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் நாளை முதல் ஹோட்டல்கள், உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்
அது போல் ஆரஞ்சு பி என வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்தப்பட வேண்டும். அது போல் வெளியே செல்வோர் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது போல் ஒற்றை படை எண்கள் கொண்ட வாகனங்கள் திங்கள்கிழமை, புதன், வெள்ளிக்கிழமை இயங்கவும், இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள், அவசர தேவைகளுக்கு மட்டும் நாள் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தளரும் கட்டுப்பாடுகள்
இரு சக்கர வாகனங்களில் பின்னால் உட்காரும் நபர் குடும்ப உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டும். எர்ணாகுளம், கொல்லம், பத்தினம்திட்டா மாவட்டங்கள் ஆரஞ்ச் ஏ பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. அந்த மாவட்டங்களில் உணவகங்களை திறக்கலாம், ஆனால் பார்சல் சேவை மட்டுமே செய்ய வேண்டும். அது போல் பச்சை நிற மண்டலங்களில் துணிக் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து வழிப்பாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் மே 3 வரை மூடியிருக்கும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications