கேரள லாட்டரி ரூ.10 கோடி: பாலக்காட்டில் வாங்கிய அதிர்ஷ்டசாலி! தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு முதல் பரிசா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல் பரிசாக ரூ. 10 கோடி வென்ற அதிர்ஷ்ட எண் வெளியாகியிருக்கிறது. பாலக்காடில் உள்ள லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு அனுமதி உள்ளது. கேரள அரசின் வருவாயிலும் கணிசமான பங்களிப்பு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை மூலமாக கிடைக்கிறது. நமக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்து பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் முன்னேறிவிட மாட்டோமா என்ற ஆசையில் கேரள மக்கள் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை விரும்பி வாங்குகிறார்கள்.

kerala lottery Bumper lottery

கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை

இப்படி டிக்கெட் வாங்குபவர்களில் அதிர்ஷ்டசாலிகளுக்கு முதல் பரிசாக பல கோடி ரூபாய் பணம் அடித்து வாழ்க்கையே புரட்டி போட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு பணம் அடித்து கோடீஸ்வரர் ஆனாலும், பல லட்சக்கணக்கானவர்கள் ஏமாறுவதோடு, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம் லாட்டரியால் காவு வாங்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

ஆனாலும் பலருக்கும் லாட்டரி மீதான மோகம் குறைந்தபாடில்லை. இதனால் கேரள அரசு தினமும் லாட்டரி விற்பனை மூலம் பெரும் தொகையை லாபமாக பெறுகிறது. தினமும் அங்கு லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்று நாள் தோறும் 70 லட்சம் முதல் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி கேரள லாட்டரித்துறை ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளையும் விற்பனை செய்கிறது.

ரூ.10 கோடி முதல் பரிசு

அந்த வகையில் தற்போது சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. கடந்த இரு மாதங்களாக பரபரப்பாக விற்பனை நடைபெற்ற நிலையில், டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி தலைமை அலுவலகமான கோர்க்கி பவனில் இந்த குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.10 கோடி SG 513715 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது.

பாலக்காடில் உள்ள கிங்ஸ்டார் ஏஜென்சியில் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. தமிழகத்தின் எல்லையோர மாவட்டம் என்பதால், தமிழகத்தை சேர்ந்த பலரும் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக கேரளா செல்வது வழக்கம். அந்த வகையில் லாட்டரி பிரியர்கள் சிலர் லாட்டரிகளை வாங்குகிறார்கள். இதனால், அதிர்ஷ்டசாலி தமிழகத்தை சேர்ந்தவராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும்

தற்போது தான் ரிசல்ட் வெளியாகியிருக்கும் நிலையில், அதிர்ஷ்ட எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியது யார் என்ற ஆர்வம் கேரள லாட்டரி பிரியர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. பலரும் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை திரும்ப திரும்ப சரிபார்த்துக்கொண்டு இருப்பதையும் காண முடிகிறது. கேரள லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த லாட்டரி பிரியர்களும் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.

கேரளாவிற்கு செல்லும் போது வாங்குவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், வெளி மாநிலத்தை சேர்ந்த லாட்டரி பிரியர்களும் ஆர்வத்துடன் தங்கள் டிக்கெட்டுகளை பார்த்து வருகிறார்கள். தற்போதுமுதல் பரிசாக ரூ.10 கோடி கிடைத்துள்ள நிலையில், வரி பிடித்த 30 சதவீதம் போக பரிசு அடித்தவர்களுக்கு மீதமுள்ள பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.

பரிசுத்தொகை எப்படி வழங்கப்படும்

பரிசு அடித்தவர்கள், தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் உடன் 30 நாட்களுக்குள் கேரள லாட்டரி தலைமை அலுவலகத்தையோ அல்லது, ஏஜென்சிகளையோ, வங்கியையோ நாடி பரிசுத்தொகையை உரிமை கோரலாம். ஒருவேளை வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு விழுந்தது என்றால், அவர்கள் கேரளாவிற்கு வந்து லாட்டரி வாங்கினார்களா? கேரளா வந்தற்கான ஆவணம், காரணம் ஆகியவற்றை உறுதி செய்த பிறகு பரிசுத்தொகை அளிக்கப்படும். கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை வாங்கியிருந்தால் பரிசுத்தொகையை கேரள அரசு மறுப்பதற்கு உரிமை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+