இந்த ஸ்வப்னா பண்ண காரியத்தை பார்த்தீங்களா... தோண்ட தோண்ட வெளி வரும் பகீர் தகவல்கள்!
திருவனந்தபுரம்: இந்த ஸ்வப்னா பண்ண காரியத்தை பார்த்தீங்களா... விசாரணை நடத்தியதில் போலீசாருக்கே ஜெர்க் ஆகிவிட்டது.. கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக நாளுக்கு நாள் பகீர்கள் வெளியாகி வருகின்றன.
கேரளாவின் ஸ்வப்னா தங்கம் கடத்திய வழக்கு தொடர்பான விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது... திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் கடத்தப்பட்ட தங்கத்தை நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததாக சொப்னா கும்பல் ஏற்கனவே சொன்னது.
இதை முதலில் என்ஐஏ நம்பவில்லை.. பெரும்பாலான கடத்தல் தங்கம், தீவிரவாதிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இருப்பதால்தான் என்ஐஏயும் அதிரடியாக களத்தில் இறங்கியது

விசாரணை
சுங்க இலாகா விசாரணையிலும் இதே விவரங்கள்தான் கிடைத்தன. இப்போதைக்கு ஸ்வப்னா, சரித், சந்திப்நாயா் மற்றும் ரமீஸ் உள்ளிட்ட 16 பேரை, தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனா். இது தொடா்பாக சுங்கத் துறையினரும் தனியாக விசாரிக்கின்றனா்.

எதிர்ப்பு
இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஸ்வப்னா தாக்கல் செய்த மனு என்ஐஏ. ஸ்பெஷல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.. ஆனால் அதற்கு என்ஐஏ தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.. மேலும் என்ஐஏ விசாரணை குழு எதிர் மனுவையும் தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்வப்னாவும், அவரது கூட்டாளிகளும் கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு
மேலும், சரித்குமார், ஸ்வப்னா, பைசல் பரீத், சந்திப் நாயர், ரமீஸ் ஆகியோர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மொத்தம் 20 முறை இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனராம்.. இதுவரை 200 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது என்று என்ஐஏ மனுவில் தெரிவிக்கப்பட்டது... இதையடுத்து, ஸ்வப்னாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஸ்பெஷல் கோர்ட் ஒத்திவைத்தது.

2 பேர் ஆஜர்
இதனிடையே இந்த வழக்கில் கைதான சரபுதீன், ஷாபிக் 2 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்... அவர்கள் 2 பேரையும் 4 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கவும் ஸ்பெஷல் கோர்ட் அனுமதி தந்துள்ளது.. அப்படி இவர்களிடம் விசாரணை நடத்தும்போது, ஸ்வப்னா & கோ குறித்த இன்னும் பல பகீர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications